தவெக அரசு நடத்திய நாடகம் அம்பலம்: முதல்வர் விஜய்யின் பேச்சை குறிப்பிட்டு டிடிவி தினகரன் கடும் தாக்கு
உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சென்னை கோவளத்தில் நடைபெற்ற தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஜோசப் விஜய் தொகுதி மறுவரையறையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாததை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
சென்னை கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது தொகுதி மறுவரையறையின்போது மாநிலங்களின் பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் குறையாமல் இருப்பதை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
விஜய்யின் இந்த கருத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், தவெக அரசு நடத்திய நாடகம் அம்பலமாகியுள்ளதாகக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.