PulseNews
அரசியல்

4 மாணவிகளுக்கு கொடுமை.. நெல்லை கிறிஸ்தவ போதகரை 4 முறை தூக்கிலிட உத்தரவு..! நீதிபதியின் சம்மட்டி அடி தீர்ப்பு

“பெற்றோர் தங்களை விட உங்களை நம்பித்தானே அனுப்பி வைக்கிறார்கள்.. நீங்கள் செய்தது ஏற்றுக் கொள்ள முடியாதது, 4 பெண் குழந்தைகளின் வாழ்வை சீரழித்த உங்களை 4 முறை தூக்கிலிட உத்தரவிடுகிறேன்..” பெந்தேகோஸ்தே திருச்சபை போதகருக்கு மரண தண்டனை விதித்த போது நீதிபதி சுரேஷ்குமார் சொன்ன வார்த்தைகள் தான் இவை..! நெல்லை மாவட்டம் , தேவர் குளம் அருகே உள்ள மேல இழந்தகுளம் பகுதியில் உள்ள பெத்தகோஸ்தே திருச்சபையில் கிறிஸ்தவ மத போதகராக வலம் வந்தவர் ஆபிரகாம்((வயது 47)) கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளி விடுமுறையில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு பைபிள் பாடம் சொல்லிக் கொடுப்பதாக கூறி 4 சிறுமிகளை திருச்சபைக்கு அழைத்துச்சென்றுள்ளார். 13 வயது சிறுமியிடம் ஆரம்பித்த பாலியல் அத்துமீறலை, 10, 9, 8 வயதுடைய சிறுமிகளிடமும் தொடர்ந்துள்ளான் போதகர் ஆபிரகாம். தனது மிருகத்தனமான செயலை வீட்டில் சொல்லக்கூடாது என்றும் அப்படிச் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார். அந்த பிஞ்சு குழந்தைகளிடம் ஆபிரகாம், தொடர்ந்து இதே போல அத்துமீறலில் ஈடுபட்டதால் 13 வயது சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுமியை மருத்துவமனை அழைத்துச்சென்ற போது ஆபிரகாமின் அத்துமீறல்களை அந்த மாணவி தெரிவித்துள்ளார், மேலும் 3 சிறுமிகளிடமும் போதகர், இதே போன்று அடைத்து வைத்து தகாத செயலில் ஈடுபட்டதையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் போதகர் ஆபிரகாமை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜரானார். போலீசாரின் வலுவான ஆதாரங்கள் மற்றும் அரசு வழக்கறிஞரின் வாதங்களின் அடிப்படையில் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், 4 சிறுமிகளின் வாழ்க்கையை சீரழித்த குற்றவாளி ஆபிரகாமை 4 முறை தூக்கிலிட உத்தரவிட்டு மரண தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம் அரசு இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பை வாசித்த நீதிபதி கூறுகையில், "பெற்றோர்கள் தங்களை விட உங்களைத்தான் அதிகமாக நம்பி குழந்தைகளை அனுப்புகிறார்கள். நீங்கள் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களுக்கு இந்த நீதிமன்றம் 4 முறை தூக்கிலிட்டு மரண தண்டனை விதிக்கிறது. இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்" என்று குறிப்பிட்டார். தனக்கு மரண தண்டனை என நீதிபதி அறிவித்தவுடன், போதகர் ஆபிரகாம் அதிர்ச்சியில் நீதிமன்றத்திலேயே மயங்கி சுருண்டு விழுந்தார். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர். போதகரின் குடும்பத்தினர் இதைப்பார்த்து உடைந்து அழுதபடியே நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறினர். சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த பெந்தே கோஸ்தே திருச்சபை போதகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Polimer News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
4 மாணவிகளுக்கு கொடுமை.. நெல்லை கிறிஸ்தவ போதகரை 4 முறை தூக்கிலிட உத்தரவு..! நீதிபதியின் சம்மட்டி அடி தீர்ப்பு
PulseNews சுருக்கம்

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகேயுள்ள மேல இழந்தகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம் (47). இவர் பெந்தேகோஸ்தே திருச்சபையில் போதகராக இருந்த நிலையில், 2022-ம் ஆண்டு பள்ளி விடுமுறை காலத்தில் நான்கு மாணவிகளுக்கு பாலியல் ரீதியான கொடுமைகளை இழைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குழந்தைகளின் வாழ்வை சீரழித்த போதகரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கண்டனம் தெரிவித்தார். பெற்றோர்கள் நம்பி அனுப்பிய குழந்தைகளிடம் தவறாக நடந்துகொண்டதற்காக, அவருக்கு நான்கு முறை தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics