PulseNews
அரசியல்

பழனி செல்லும் பெற்றோர்களே! ரூ.300-க்கு குழந்தையை தங்கத் தொட்டிலில் தாலாட்டலாம்.. முழு விவரம்

தமிழ்க்கடவுள் என அழைக்கப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடு தான் திண்டுக்கல் மாவட்டம் பழனியாகும். பழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருகை தருவார்கள். பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, சஷ்டி, சூரசம்ஹாரம் ஆகிய விஷேச நாட்களின் பக்தர்கள் அலைகடலாய் திரண்டு வருவார்கள். தமிழகத்தில் அதிகமான வருவாய் தரக்கூடிய ஒரே கோயில் பழனி முருகன் கோயில்.

பழனி முருகன் கோயிலில் கடந்த 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி தங்கத் தொட்டில் திட்டம் தொடங்கப்பட்டது. ஓசூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் வழங்கிய இந்த தங்கத்தொட்டில் திட்டம் மிக சிறப்பாக செயல்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த 2025ம் ஆண்டு இந்த தங்கத்தொட்டில் அறை நவீன வசதிகளுடன் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த திட்டத்தை நாம் ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் அணுக முடியும். தங்க தொட்டிலில் உங்கள் குழந்தையை தாலாட்ட ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பழனி முருகன் கோயிலில் அதிகாரப்பூர்வ இணையதளம் உள்ளே செல்ல வேண்டும். அதில் Temple Booking Services என்ற பகுதிக்கு செல்ல வேண்டும். அதனுள் Temple Services Paid / Donation Services என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில் தங்கத் தொட்டில் திட்டம் (Prathana Golden Cradle Online) என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். அதில் ஒவ்வொரு வாரமும் தேதி வாரியாக முன்பதிவு டிக்கெட் ரிலீஸ் செய்யப்படும். நீங்கள் விரும்பும் தேதியை கிளிக் செய்து அதில் உங்கள் பெயர், முகவரி, அடையாள சான்று போன்றவை கொடுத்து பணம் செலுத்தலாம். வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் 044 - 28339999 / 0454 5241293 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.

நீங்கள் பணம் செலுத்திய ரசீதை நேரில் சென்று வழங்கி உங்கள் குழந்தையை தங்கத் தொட்டிலில் தாலாட்டலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் கோயிலில் உள்ள அலுவலகத்தில் நேரடியாக சென்று டிக்கெட் பெறலாம். இதற்காக பிரத்யேக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முன்பதிவானது ஒவ்வொரு நாளும் முந்தைய தினம் இரவு 11.58 மணிக்கு நிறைவடையும். எனவே அடுத்தமுறை பழனி சென்றால் மறக்காமல் குழந்தைகளை தங்கத் தொட்டிலில் தாலாட்டி மகிழுங்கள்.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பழனி செல்லும் பெற்றோர்களே! ரூ.300-க்கு குழந்தையை தங்கத் தொட்டிலில் தாலாட்டலாம்.. முழு விவரம்
PulseNews சுருக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகன் கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகப் போற்றப்படும் புகழ்மிக்கத் தலமாகும். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் இக்கோவிலில், சிறப்பு நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

தமிழகத்திலேயே அதிக வருமானம் ஈட்டித் தரும் இக்கோவிலில், பக்தர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி தங்கத் தொட்டிலில் வைத்து தங்கள் குழந்தைகளைத் தாலாட்டும் வசதி செய்யப்பட்டுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics