“மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருந்து காவிரி உரிமையை இழக்கக் கூடாது” - அன்புமணி
‘மேகேதாட்டு அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அமைதியாக இருப்பது நல்லதல்ல. தமிழக அரசின் அலட்சியம் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை தாரைவார்ப்பதாக அமைந்துவிடும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது’ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வரும் சூழலில், தமிழ்நாடு அரசு அமைதி காப்பது சரியான அணுகுமுறை அல்ல என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். தமிழக அரசின் இந்த அலட்சியப் போக்கு, காவிரி நீரில் மாநிலத்திற்கு உள்ள உரிமைகளை இழக்கச் செய்யும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, காவரி நதிநீர் விவகாரத்தில் இனியும் மெத்தனமாக இருக்காமல், மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.