PulseNews
அரசியல்

கமிஷன் கேட்டா உடனே வேலை காலி! எச்சரிக்கை விடுத்த அமைச்சர்..!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது கூறுகையில்; அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம் அல்லது கமிஷன் கோரும் பணியாளர்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் உடனடியாகப் பணிநீக்கம் அல்லது இடமாற்றம் செய்யப்பட்டு புதிய மாற்றுப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.

மேலும், கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை இரண்டு முதல் ஏழு நாட்களுக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதால், விவசாயிகள் எக்காரணத்தைக் கொண்டும் இடைத்தரகர்களை நம்பி தங்களது உழைப்பில் விளைந்த நெல்லை குறைந்த விலைக்கு விற்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி

முன்னதாக, சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் மாவீரன் மற்றும் கீழ மூவர்கரை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் சங்கர் ஆகிய இருவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் ஆகியோர் இணைந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த இரு மீனவர்களின் குடும்பங்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாய்க்கான நிவாரண உதவித் தொகையை வழங்கித் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.

குறுவை பருவ நெல் கொள்முதல் தயார்நிலை

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர், மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு குறுவைப் பருவத்தில் விளைச்சல் மற்றும் அறுவடை நிலவரத்தைக் கணக்கில் கொண்டு, தற்சமயம் முதற்கட்டமாக 33 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன என்றார். வரும் நாட்களில் அறுவடை தீவிரமடைந்து நெல் வரத்து மற்றும் தேவை அதிகரிக்கும் பட்சத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 130 கொள்முதல் நிலையங்கள் வரை திறப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. தற்பொழுது திறக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தலா ஆயிரம் நெல் மூட்டைகளைச் சேமித்து வைப்பதற்கான போதிய இடவசதியும் பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் மற்றும் சேமிப்பு ஏற்பாடுகள்

கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து அதிகமானால், நெல் மூட்டைகள் மழையிலோ அல்லது வெயிலிலோ பாழாகாத வண்ணம் உடனடியாக அவற்றை நுகர்பொருள் வாணிபக் கழகக் குடோன்களுக்கு மாற்றுவதற்குத் தேவையான போக்குவரத்து மற்றும் இடவசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளின் வசதிக்காக நெல்லின் ஈரப்பதத்தை உறிஞ்சும் இயந்திரங்கள், தூற்றும் இயந்திரங்கள், சாக்கு மூட்டைகள் மற்றும் தார்பாய்கள் ஆகியவை எந்தவிதத் தட்டுப்பாடும் இன்றி தேவையான அளவிற்கு முழுமையாகக் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்களது நெல்லைக் தாமதமன்றி விற்றுச் செல்ல அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ளன.

விவசாயிகளுக்கு அமைச்சரின் வேண்டுகோள்

நடப்பு ஆண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 9 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என வேளாண்மைத் துறை மூலம் முறைப்படி கணிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கொண்டுவரும் ஒவ்வொரு நெல்மணியையும் தாமதமின்றி கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முழு தயார் நிலையில் உள்ளது. எனவே, இடைத்தரகர்களின் போலியான வார்த்தைகளை நம்பி நெல்லை அடிமாட்டு விலைக்கு விற்காமல், அரசு அமைத்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைப் பயன்படுத்தி உரிய ஆதரவு விலையைப் பெற்றுப் பயன்பெறுமாறு விவசாயிகள் அனைவரையும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கமிஷன் கேட்டா உடனே வேலை காலி! எச்சரிக்கை விடுத்த அமைச்சர்..!
PulseNews சுருக்கம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் குறித்து எச்சரிக்கை விடுத்தார். விவசாயிகளிடம் லஞ்சம் அல்லது கமிஷன் கோரும் பணியாளர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்தார்.

அத்தகைய பணியாளர்கள் மீது உடனடியாக பணிநீக்கம் அல்லது இடமாற்றம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். மேலும், தவறு செய்யும் பணியாளர்களுக்குப் பதிலாக புதிய பணியாளர்கள் உடனடியாக நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics