தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு அரசுப் பதவி வழங்கியது தமிழ்நாடு அரசு
முன்னாள் அதிமுக பிரமுகரான சிங்கை ராமச்சந்திரன், அண்மையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், அவருக்கு தமிழ்நாடு அரசு தற்போது புதிய அரசுப் பொறுப்பை வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள…

முன்னாள் அதிமுக பிரமுகரான சிங்கை ராமச்சந்திரன், அண்மையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், அவருக்கு தமிழ்நாடு அரசு தற்போது புதிய அரசுப் பொறுப்பை வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் (TANSIM) தலைவராக சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவிலிருந்து விலகி தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து அவர் பணியாற்றி வருகிறார்.
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் சிங்கை ராமச்சந்திரன் இந்த புதிய பொறுப்பினைப் பெற்றுள்ளார்.