தமிழக அரசியலில் புதிய திருப்பம்: விஜய் தலைமையில் 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' உதயம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்ற புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளன. தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயமாக…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்ற புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளன. தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படும் இந்த அணியானது, தற்போதைய ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் கூட்டணியாக அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எவ்வித கூட்டணியும் இன்றி போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம், 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 119 இடங்கள் கிடைக்காத சூழலில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் இந்த புதிய கூட்டணிக்கு வடிவம் கொடுத்துள்ளார்.
இந்தக் கூட்டணி குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். தவெக தலைமையிலான இந்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்பதை அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.