தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக சேது செல்வம் அறிவிப்பு
புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சேது என்கிற சேது செல்வம் போட்டியிடுவார் என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித…
புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சேது என்கிற சேது செல்வம் போட்டியிடுவார் என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வேட்பாளர் பெயரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவித்துள்ளார். வேட்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதில் திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
#politics#editorial