புதுச்சேரி தட்டாஞ்சாவடி உட்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்: தேர்தல் நடத்தை விதிகள் அமல்
தமிழகம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள மொத்தம் ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதியும் அடங்கும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள மொத்தம் ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதியும் அடங்கும்.
தட்டாஞ்சாவடி தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவிப்பதற்கான ஆயத்தப் பணிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.