ஆபத்தான 3 லட்சம் ஆணுறைகள்; அரசு எடுத்த அதிரடி முடிவு
பிரான்ஸ் நாட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 3 லட்சம் ஆணுறைகளைத் திரும்பப் பெறவும், அதன் விற்பனைகளுக்குத் தடை விதிக்கவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணுறைகளில் சிறிய அளவிலான துளைகள் இருப்பதும், அவை வெடிக்கும் அபாயத்தில் கொண்டிருப்பதும் ஆய்வின் முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதனால், நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாட்டின் சுகாதாரம், நுகர்வோர் மோசடி தடுப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகியவை இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பல்வேறு மருந்தகங்கள் மற்றும் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2.60 லட்சம் ஆணுறைகள் உடனடியாக திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆனலைனில் 40 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, 30 வகையிலான 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆணுறைகளுக்கும் ஆன்லைனில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணுறைகளின் விளம்பரங்களும் இணையத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜப்பானின் ஒகாமோட்டோ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிரான்ஸ் நிறுவனங்களான மை லூபி, ஃபிரைடே பே உள்ளிட்டவையும் தடை செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தடைவிதிக்கப்பட்டுள்ள ஆணுறைகளைப் பயன்படுத்தியவர்கள், பாலியல் தொற்று மற்றும் கர்ப்பத்தைத் தவிர்க்கும் முறையான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பிரான்சில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 3 லட்சம் ஆணுறைகளைத் திரும்பப் பெறவும், அவற்றின் விற்பனைக்குத் தடை விதிக்கவும் அந்நாட்டு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டின் சுகாதாரம் மற்றும் நுகர்வோர் மோசடி தடுப்பு பிரிவினர் இணைந்து நடத்திய சோதனையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த ஆணுறைகளில் சிறிய துளைகள் இருப்பதும், அவை எளிதில் வெடிக்கும் தன்மையுடன் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பயனாளர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.