எலிகளின் அட்ராசிட்டி; அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்
உத்திர பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த எட்டு ஆண்டுகாலமாகத் தனது குடும்பத்தின் தேவைக்காகவும், நகை வாங்கவும் கையில் கிடைத்த பணத்தை, கணவர் மற்றும் குடும்பத்தாருக்குத் தெரியாமல் ஒரு இரும்புப் பெட்டியில் சேர்த்து வைத்து வந்துள்ளார். ஆகஸ்ட் 21 அன்று, நகை வாங்குவதற்காக அந்த பெண் பெட்டியைத் திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். இத்தனை ஆண்டுகளாக, அவர் சேமித்து வைத்திருந்த 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் துண்டு துண்டாக்கப்பட்ட நிலையில் குப்பைகள் போலக் கிடந்துள்ளன. அதாவது, அந்த பெட்டியில் இருந்த சிறிய ஓட்டையின் வழியே எலிகள் புகுந்த, அதிலிருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள பணத்தையும் கடித்துக் குதறியுள்ளன. நீண்ட காலமாகச் சேமித்து வைத்திருந்த மொத்த பணத்தையும் எலிகள் இவ்வாறு கடித்துக் குதறியுள்ளதைக்கண்ட, அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதனர். மேலும், இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியுமா? என்பது குறித்தும் வங்கி அதிகாரிகளிடம் ஆலோசித்து வருகின்றனர். இது குறித்துப் பேசிய வங்கி அதிகாரி ஒருவர், பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் வங்கியில் சேமித்து வையுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த எட்டு ஆண்டுகளாக நகை வாங்குவதற்காகத் தனது குடும்பத்தினருக்குத் தெரியாமல் சிறுகச் சிறுக பணத்தைச் சேமித்து வந்துள்ளார். அவர் அந்தப் பணத்தை ஒரு இரும்புப் பெட்டியில் பாதுகாப்பாக வைத்துப் பராமரித்து வந்தார்.
கடந்த ஆகஸ்ட் 21 அன்று, நகை வாங்கும் நோக்கில் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்த அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பெட்டியில் அவர் சேமித்து வைத்திருந்த 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் எலிகளால் கடித்துக் குதறப்பட்டு, துண்டு துண்டாகக் கிடந்ததைக் கண்டு அவர் வேதனையடைந்தார்.