Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!

திமுகவில் இருந்து வேறு கட்சிக்கு செல்லும் எண்ணமில்லை என முன்னாள் அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கருணாநிதி நினைவுநாள் பொதுக்கூட்டம்

சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி, எழும்பூர் வடக்கு பகுதி சார்பில் கலைஞர் கருணாநிதியின் 8வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நடைபெற்ற “போராளி ஓய்வதில்லை” பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கலந்துக் கொண்டார்.

கடைசி வரை மு.க.ஸ்டாலின் தான்

இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, தவெக அரசை கடுமையாக சாடினார். அவர் பேசும்போது, “இந்த கூட்டம் நடைபெறும் இந்த பகுதியில் ஒட்டுமொத்தமாக மின் தடை செய்யப்பட்டுள்ளது. ஜெனரேட்டர் மூலமாக தான் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தடைகள் பல உண்டு என்றாலும் அதை தகர்த்தெறியும் பலம் திமுகவுக்கு உண்டு.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 90 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த ஆட்சியைப் பற்றி பேச ஏராளமான விஷயங்கள் உள்ளது. இன்றைக்கு இந்த பொதுக்கூட்டத்தைப் பார்த்து விட்டு நாளைக்கு தவெகவில் ஒரு கூட்டம் போடுவார்கள். நான் ஏற்கனவே சொன்னது போல திமுக பவள விழா கண்ட இயக்கம். பால்வாடி இயக்கம் எல்லாம் திமுகவுடன் போட்டி போடுகிறது. நீங்கள் ஒரு அடி முன்னேறி வருகிறீர்கள் என்றால் நாங்கள் 10 அடி முன்னேறி வருவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கும் எதிர்க்கட்சியாக வேகமாக பேச தெரியும். நான் தவெகவிற்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

Also Read: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?

இந்த நாக்கு இனி அடி பிறழாது. இந்த பாதை இனி பயணம் மாறாது. மரணத்தின் விளிம்பு என்றாலும் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் மு.க.ஸ்டாலின் வாழ்க என்று தான் என் குரல் ஒலிக்கும். அதற்காக தான் இந்த தொடர் நிகழ்ச்சிக்கு போராளிகள் ஓய்வதில்லை என பெயர் வைத்துள்ளோம்” என தெரிவித்தார்.

தவெகவுக்கு தகுதியே கிடையாது

தொடர்ந்து பேசிய கனிமொழி, முதலமைச்சர் விஜய் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறோம் என்பதை புரிந்துக் கொண்டு பேச வேண்டும். 1969ல் காவிரி விவகாரத்தில் யார் இருந்தார் என்பதெல்லாம் நான் பேச விரும்பவில்லை என சட்டசபையில் பேசுகிறீர்களே.. கருணாநிதி, திமுக போல விவசாயிகளுக்காக பாடுபட்டது வேறு யாரும் இருக்க முடியாது. அனைத்துக் கட்சி கூட்டத்தைப் போட உங்களுக்கு தைரியமில்லாத நிலையில் நீங்கள் கருணாநிதியைப் பற்றி கேள்வி கேட்க எந்த தகுதியுமில்லை. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய தொடங்கி விட்டார்கள். அரசு ஊழியர்கள் தொடங்கி விவசாயி வரை மாற்றத்திற்கு வாக்களித்தவர்கள் ஏமாந்துள்ளார்கள் என தெரிவித்தார்.

Source: Read Full Article

கலைஞர் கருணாநிதியின் எட்டாவது நினைவுநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'போராளி ஓய்வதில்லை' பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
தான் வேறு கட்சிக்குச் செல்லும் எண்ணம் இல்லை என்றும், மரணத்தின் விளிம்பில் இருந்தாலும் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் மு.க.ஸ்டாலின் வாழ்க என்றுதான் தனது குரல் ஒலிக்கும் என்றும் சேகர்பாபு திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், தவெக ஆட்சியை விமர்சித்த அவர், திமுகவை எந்தத் தடையும் தகர்க்க முடியாது எனக் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பேசிய கனிமொழி, விவசாயிகளுக்காக உழைத்த திமுகவைப் பற்றி விமர்சிக்க தவெகவுக்குத் தகுதியோ தைரியமோ இல்லை என்று குற்றம் சாட்டினார்.