PulseNews
அரசியல்

ஹனி டிராப்; பாகிஸ்தானுக்கு ரகசியங்களை கசியவிட்ட விங் கமாண்​டர்; டெல்லி போலீஸார் அதிர்ச்சி தகவல்..!

ஹனி டிராப் மூலம் பாகிஸ்​தான் உளவுத் துறை​யின் சதித் திட்​டத்​தில் சிக்கி, இந்தியாவின் பாது​காப்பு தொடர்பான ரகசி​யங்​களை பகிர்ந்து கொண்​ட​தாக விங் கமாண்​டர் ஒரு​வர் மீது இந்​திய விமானப்​படை புகார் செய்​தது. புகாரின் அடிப்படையில், டெல்லி காவல் துறை​யின் உளவுப் பிரிவு மற்​றும் விமானப்​படை​யின் உளவுப் பிரிவு இணைந்து நடத்​திய நடவடிக்​கை​யில், கடந்த மே 31, 2026 அன்று இரவு குறித்த அதி​காரி கைது செய்​யப்​பட்​டார். விங் கமாண்​டரிடம் நடத்​தப்​பட்ட விசாரணை அடிப்​படை​யில் டெல்லி போலீஸார் நேற்று வெளி​யிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; ''விங் கமாண்​டர் மீது அதி​காரப்​பூர்வ ரகசி​யச் சட்​டத்​தின் கீழ் வழக்குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது. தனிப்​பட்ட வாழ்க்​கை​யில் கடினமான கட்​டத்​தைக் கடந்​து​கொண்​டிருந்த அந்த அதி​காரி, சமூக வலை​தளம் மூல​மாக ஒரு பெண்​ணுடன் பழகத் தொடங்கியுள்ளார். அந்​தப் பெண் படிப்​படி​யாக அதி​காரி​யின் நம்​பிக்​கை​யைப் பெற்று, ராணுவ நடவடிக்​கை​களின் நகர்​வு​கள் குறித்த விவரங்​களைக் கேட்​டுப் பெற்​றுள்​ளார். மேலும், முக்​கிய ஆவணங்​களை​ அந்​தப் பெண்​ணுக்கு அதி​காரி அனுப்​பி​யுள்​ளார். இதுகுறித்து தொடர்ந்து வி​சா​ரணை நடை​பெற்று வரு​கிறது.''என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Seithipunal13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஹனி டிராப்; பாகிஸ்தானுக்கு ரகசியங்களை கசியவிட்ட விங் கமாண்​டர்; டெல்லி போலீஸார் அதிர்ச்சி தகவல்..!
PulseNews சுருக்கம்

ஹனி டிராப் எனப்படும் வலையில் சிக்கி, நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தான் உளவுத் துறைக்கு கசியவிட்டதாக விங் கமாண்டர் ஒருவர் மீது இந்திய விமானப்படை புகார் அளித்தது. இதன் அடிப்படையில், விமானப்படை மற்றும் டெல்லி காவல்துறையின் உளவுப் பிரிவினர் இணைந்து நடத்திய நடவடிக்கையில், கடந்த 2026 மே 31-ம் தேதி இரவு அந்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் சிரமங்களைச் சந்தித்து வந்த அந்த அதிகாரி, சமூக வலைதளம் வழியாக ஒரு பெண்ணுடன் பழகத் தொடங்கியுள்ளார். அந்தப் பெண் படிப்படியாக அதிகாரியின் நம்பிக்கையைப் பெற்று ராணுவ ரகசியங்களையும் முக்கிய ஆவணங்களையும் பெற்றுள்ளார். தற்போது அந்த அதிகாரி மீது அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics