PulseNews
அரசியல்

ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடியை ஏற்றுங்கள்; பொதுமக்களுக்குப் பிரதமர் வேண்டுகோள்

வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று 79 ஆம் ஆண்டு ‘சுதந்திர தினம்’ நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. எனவே, சுதந்திர தினத்தன்று மக்கள் வீடு தோறும் மூவர்ணக்கொடியை (தேசியக் கொடி) ஏற்ற வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்த ஆண்டு முதல் ’வீடு தோறும் மூவர்ணக்கொடி’ என்ற இயக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, பொது மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக்கொடி ஏற்ற வேண்டும். அந்த வகையில், இந்த ஆண்டும் வீடுதோறும் மூவர்ணக்கொடி இயக்கம் நேற்று (09-08-26) தொடங்கி ஆகஸ்ட் 17 வரை நடக்கிறது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தள பக்கத்தில், ”நமது மூவர்ணக் கொடியானது நமது பெருமையாகவும், தேசத்திற்காக எப்போதும் நமது சிறந்த பங்களிப்பை வழங்கத் தொடர்ச்சியான உத்வேகமாகவும் விளங்குகிறது. வீடு தோறும் மூவர்ணக்கொடி (ஹர் கர் திரங்க) இயக்கத்தில் உற்சாகத்துடன் பங்கேற்போம். 'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) எனும் இலக்கை நோக்கிப் பணியாற்றுவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டைப் புதுப்பித்துக்கொள்வோம். வந்தே மாதரம் முழக்கத்தின் 150-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், இந்த ஆண்டின் முயற்சிகள் அதற்கே அர்ப்பணிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடியை ஏற்றுங்கள்; பொதுமக்களுக்குப் பிரதமர் வேண்டுகோள்
PulseNews சுருக்கம்

வருகிற ஆகஸ்ட் 15 அன்று நாட்டின் 79-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் 'வீடு தோறும் மூவர்ணக்கொடி' இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 9 முதல் 17-ம் தேதி வரை இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

தேசியக் கொடியானது தேசத்தின் பெருமை மற்றும் உத்வேகத்தின் அடையாளமாக திகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், இந்த இயக்கத்தில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற இலக்கை நோக்கிய கூட்டு உறுதிப்பாட்டைப் புதுப்பித்துக் கொள்வதோடு, வந்தே மாதரம் முழக்கத்தின் 150-வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் இந்த முயற்சிகள் அர்ப்பணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics