PulseNews
அரசியல்

வரலாற்றில் இல்லாத அளவில் நெல், கரும்பு ஊக்கத்தொகை உயர்வு: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான தனித்தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து, நெல், கரும்பு ஊக்கத்தொகை உயர்வு குறித்து 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் திங்கள்கிழமை அறிவித்தார். அதில், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 789 ஊக்கத் தொகை என்றும் நெல் கொள்முதல் பருவம் செப்டம்பர் 1 முதல் தொடங்க உள்ளது. கரும்புக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.709.50 வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பதாவது: நெல், கரும்பு ஊக்கத்தொகை உயர்வு விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கில் நெல், கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க முடிவு செய்து உள்ளோம். சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.289, பொதுரக நெல் குவிண்டாலுக்கு ரூ.150ம் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,750, பொது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,600 கிடைக்கும். சர்க்கரை ஆலைகளில் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.3290.50வழங்குகிறது. அத்துடன் கரும்புக்கான ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.709.50 தமிழக அரசு சார்பில் வழங்கப்படும். இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 4,000 விலையாக கிடைக்கும். வரலாற்றிலேயே முதல் முறை நெல்லுக்கு ரூ.150 வரை உயர்த்தப்பட்டுள்ளது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. அதேபோல, கரும்பு டன் 134-க்கு மேல் வழங்குவதும் இதுதான் முதல் முறையாகும். நமது அரசு விவசாயிகளை விட்டுவிடாமல் தோளோடு தோள் கொடுத்து, விவசாயிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.” என்று முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வரலாற்றில் இல்லாத அளவில் நெல், கரும்பு ஊக்கத்தொகை உயர்வு: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் விஜய் அறிவிப்பு
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை வரலாறு காணாத வகையில் உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதன்படி, சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.289 மற்றும் பொது ரக நெல்லுக்கு ரூ.150 என ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,750-ம், பொது ரக நெல்லுக்கு ரூ.2,600-ம் பெறுவர்; நெல் கொள்முதல் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ளது. அதேபோல், கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.709.50 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் நிலையில், மத்திய அரசின் விலையையும் சேர்த்து மொத்தம் ரூ.4,000 விவசாயிகளுக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics