சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல் : காரணங்கள் கண்டறிவு
சிறைச்சாலைகளில் சமீபத்தில் நடந்த மோதல்களுக்குப் பல காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடரும் அதே வேளையில் அதற்கான தீர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். இன்றைய(11) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர், இச்சம்பவங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தினார். நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் குறி...

சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.
இன்றைய (11) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் அதேவேளையில், சிறைச்சாலை மோதல்களுக்குத் தேவையான தீர்வுகளைக் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.