PulseNews
அரசியல்

சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும்: கதறி அழுத காங்கிரஸ் கவுன்சிலர்

தன்னை களங்கப்படுத்தியதாக கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும் என வார்டு பகுதி மக்களுடன் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் மேயரிடம் மனு அளித்தார். கடந்த மாமன்ற கூட்டத்தில் செம்மொழிப் பூங்கா 40 கோடி ஊழல் தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், அந்த புகார் தொடர்பாக மாமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என 44 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி முறையிட்டார். அப்போது, தி.மு.க கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயத்ரியை இரண்டு மாமன்ற கூட்டத்திலிருந்து மேயர் ரங்கநாயகி சஸ்பெண்ட் செய்தார். இந்நிலையில், இன்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தங்களது வார்டு பகுதி மக்களுடன் வருகை புரிந்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி தன்னை சஸ்பெண்ட் செய்தது திரும்பப் பெற வேண்டும் எனவும், களங்கம் ஏற்படுத்தியதாக தெரிவிப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், அதனை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஒரு கட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தான் முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலத்தின் மகள் தன்னைக் கலங்கம் ஏற்படுத்தியவர் எனக் கூறுவது மிகுந்த வருத்தம் அளிப்பதாக கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் மேயர் ரங்கநாயகியிடம் கவுன்சிலர் காயத்ரியுடன் சென்று 44 வது வார்டு பகுதி மக்கள் மீண்டும் தங்கள் கவுன்சிலரை சஸ்பெண்ட் செய்யாமல் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் மனு அளித்தனர். இது தொடர்பாக மேயர் ரகங்கநாயகியிடம் கேட்டபோது தான் சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற முடியாது என்றும் மக்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் என்றால் அவர்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தெரிவிக்கலாம் அதிகாரிகளிடத்தில் தெரிவிக்கலாம் என கூறினார்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும்: கதறி அழுத காங்கிரஸ் கவுன்சிலர்
PulseNews சுருக்கம்

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் இருந்து தங்களை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தி, 44-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி தனது பகுதி மக்களுடன் மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் இது தொடர்பாக அவர் மேயரிடம் மனு ஒன்றையும் அளித்தார்.

கடந்த மாமன்றக் கூட்டத்தில் செம்மொழிப் பூங்கா கட்டுமானத்தில் 40 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக வெளியான செய்திகள் குறித்து விவாதிக்க வேண்டும் என காயத்ரி வலியுறுத்தினார். அப்போது தி.மு.க கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, தன்னை களங்கப்படுத்தியதாகக் கூறி சஸ்பெண்ட் செய்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics