PulseNews
அரசியல்

சிறுபான்மையினரின் பாதுகாவலன் திமுகவா தவெகவா?-பேரவையில் வெடித்த மோதலின் பின்னணி-உடைக்கும் புதுமடம் ஹலீம்

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் அண்மையில் சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் நலன்கள் மற்றும் அவர்களுக்கான உரிமைகள் குறித்து ஆளும் கட்சி மற்றும் தவெக உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. இஸ்லாமியர்களின் உண்மையான பாதுகாவலராகத் திகழ்ந்தது யார் என்ற வரலாற்று ரீதியான விவாதங்களும், கடந்த கால அரசியல் நிலைப்பாடுகளும் சபை அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இது இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் தங்களின் உண்மையான பிரதிநிதி யார் என்ற அரசியல் கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. இதுகுறித்து அரசியல் விமர்சகர் புதுமடம் ஹலீம் நக்கீரன் டிவிக்கு அளித்த பேட்டியில் தனது பார்வைகளைப் பகிர்ந்து கொண்டார். அதில்:"சட்டமன்றத்தில் தவெக எம்.எல்.ஏ மதார் பத்ருதீன் (முஸ்தபா) பேசும்போது, திமுக கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியதாக ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சபாநாயகரிடம் ஏதோ ஒரு வெற்றுப் பேப்பரை ஆதாரமாகக் கொடுத்துவிட்டு, பழைய விஷயங்களைப் பேசி யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்று கூறி நாடகமாடுகிறார். நான் கேட்கிறேன், தமிழக முஸ்லிம்களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் செய்த நன்மைகளை விட நெருக்கமாக வேறு எந்தக் கட்சியாவது செய்துள்ளதா? பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக இஸ்லாமியர்களுக்கான 7% இட ஒதுக்கீடு நீக்கப்பட்டது. அதன் பிறகு, 1995-ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உருவான பிறகுதான் இஸ்லாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கை வலுப்பெற்றது. இஸ்லாமியர்களின் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, 2007 செப்டம்பர் 15-ல் கலைஞர் தான் இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட ஒதுக்கீட்டை அரசாணையாக வழங்கித் தந்தார்.மட்டுமன்றி, நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது, 'தமிழகத்தில் சிஏஏ-வை அமல்படுத்த மாட்டோம்' என்று சட்டமன்றத்தில் தைரியமாகத் தீர்மானம் நிறைவேற்றியவர் தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால், முந்தைய எடப்பாடி பழனிசாமி அரசு அதுபோன்ற தீர்மானம் தேவையில்லை என்று பாஜகாவுக்குப் பயந்து பின்வாங்கியது. கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு 'கண்ணியமிகு' என்ற பட்டத்தைக் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா. காயிதே மில்லத் அவர்களுக்கும், சீராபுராணம் இயற்றிய உமறுப் புலவருக்கும் மணிமண்டபம் கட்டியவர் கலைஞர். மத்திய பாஜக அரசு இஸ்லாமிய மாணவர்களுக்கான அப்துல் கலாம் ஆசாத் உயர்கல்வி உதவித்தொகையை ரத்து செய்தபோது, தமிழக அரசு நிதி ஒதுக்கி, வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு தலா 35 லட்சம் ரூபாய் வட்டி இல்லாத கடன் வழங்கியவர் மு.க.ஸ்டாலின். கடந்த ஆட்சியில் கோவை சிறைவாசிகள் 21 பேரை விடுதலை செய்ததும் இதே திமுக அரசுதான். சட்டமன்றத்தில் திமுக ஐந்து முறை முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்று கூறியதாக பாஜக உறுப்பினர் பேசியது அப்பட்டமான பொய் தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்குத் தெரிந்ததெல்லாம் மவுண்ட் ரோடு புகாரி மற்றும் பிலால் பிரியாணிதானே தவிர, இஸ்லாமியர்களின் அரசியல் வரலாறு அல்ல. விஜய் நடித்த 'துப்பாக்கி' போன்ற படங்கள் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளுக்கு ஆதரவானவர்களாகவும், நம்பகத்தன்மை அற்றவர்களாகவும் சித்தரித்தபோது விஜய் எப்போதாவது அதற்கு எதிராக ரியாக்ட் செய்திருக்கிறாரா? சுயநல அரசியலுக்காக தவெக இஸ்லாமியப் பிம்பத்தைக் கட்டமைக்க முயல்கிறது" என்று குற்றம் சாட்டினார்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சிறுபான்மையினரின் பாதுகாவலன் திமுகவா தவெகவா?-பேரவையில் வெடித்த மோதலின் பின்னணி-உடைக்கும் புதுமடம் ஹலீம்
PulseNews சுருக்கம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், இஸ்லாமிய சமூகத்தினரின் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்த விவாதத்தின்போது ஆளும் கட்சியான திமுக மற்றும் தவெக உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இஸ்லாமியர்களின் உண்மையான பாதுகாவலராகத் திகழ்ந்தது யார் என்ற வரலாற்று விவாதங்கள் சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

கடந்த கால அரசியல் நிலைப்பாடுகள் குறித்து எழுந்த இந்த விவாதம், இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியில் தங்கள் உண்மையான அரசியல் பிரதிநிதி யார் என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. இது குறித்து புதுமடம் ஹலீம் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics