56,000 பேர் ஓய்வூதியம் இன்றி தவிக்கிறோம்; அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓய்வூதியர் நல சங்கம் வலியுறுத்தல்
தமிழக அரசு கல்லூரி ஆசிரியர் பங்களிப்பு திட்ட ஓய்வூதியர் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று, தலைவர் ஜோசப் ஜான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவர் யூனஸ், துணைத் தலைவர் (மகளிர்) சுப்புரத்தினம், செயலாளர் ரவி, இணைச்செயலாளர்கள் அன்பழகன், அருணா, பொருளாளர் கோபண்ணசாமி , ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மு.க.அழகிரியின் மகனுக்கு மருத்துவ பரிசோதனை: சி.பி.ஐ கோர்ட் உத்தரவு கூட்டத்திற்கு பின் மாநில தலைவர் ஜோசப் ஜான்,செயலாளர் ரவி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 01/04 /2003- க்கு முன்பு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் உள்ளது. 01/01/ 2026 முதல் ஓய்வு பெற்றுவரும் அரசு ஊழியர்களுக்கு டாப்ஸ் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால் 01-04- 2003 முதல் 31-12- 2025 வரை சி.பி.எஸ்-ல் பணியாற்றி ஓய்வு பெற்ற 56,000 பேர் மாத ஓய்வூதியம் இன்றி தவிக்கிறோம். எனவே, 2003 முதல் 2025 கால கட்டத்தில் அரசு பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் எனக் கூறினர். க.சண்முகவடிவேல்

திருச்சியில் நடைபெற்ற தமிழக அரசு கல்லூரி ஆசிரியர் பங்களிப்பு திட்ட ஓய்வூதியர் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், தலைவர் ஜோசப் ஜான், செயலாளர் ரவி மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தங்கள் சங்கத்தைச் சேர்ந்த 56,000 பேர் ஓய்வூதியம் கிடைக்காமல் அவதிப்படுவதாகத் தெரிவித்த நிர்வாகிகள், இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.