PulseNews
அரசியல்

“இது நியாயமா?” - முதல்வருக்கு தமிமுன் அன்சாரி கேள்வி!

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் நேபாள நாட்டிற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சிதம்பரத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளத்தில் சிக்கிய நிலையில், அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக தலைமைச் செயலக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்துத் தொடர்ந்து கண்காணித்ததுடன், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்க வேண்டும் எனச் சட்டப்பேரவையிலும் குரல் கொடுத்தேன். நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பது தொடர்பாகச் சட்டப்பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவந்தேன். இந்த நிலையில், தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அவர்களை நேபாளத்தில் இருந்து மீட்டு சிதம்பரத்தைச் சேர்ந்தவர்களை வரவேற்கும் வகையில் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் ராஜ்குமார், மாவட்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளார்கள். சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை தொகுதி சட்டமன்ற உறுப்பினரைப் புறக்கணித்துள்ளனர். மக்களின் பிரச்சினையைக் கையில் எடுத்துத் தொடர்ந்து முயற்சி செய்து, சட்டப்பேரவையிலும் குரல் கொடுத்த மக்கள் பிரதிநிதிக்குக் குறைந்தபட்சம் தகவல் கூட தெரிவிக்காதது ஏன். பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான விஷயங்களில் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் உரியத் தகவல் மற்றும் மரியாதை வழங்கப்பட வேண்டாமா? இது நியாயமா? இதே போன்று பல அரசு நிகழ்ச்சிகளுக்குத் தகவல் அளிப்பது இல்லை” என்று தமிழக முதல்வருக்கு அறிக்கை வாயிலாகக் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் ராஜ்குமாரைத் தொடர்பு கொண்டோம் அவர் தொலைப்பேசியை எடுக்க மறுத்துவிட்டார். அமைச்சர் எதிர்க் கட்சி உறுப்பினர்களை எதிரி கட்சி உறுப்பினர்களாகக் கருதி மாவட்ட அதிகாரிகளுக்கு எதிர்க் கட்சி தொகுதி உறுப்பினர்களுக்குத் தகவல் அளிக்கத் தடை விதித்துள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“இது நியாயமா?” - முதல்வருக்கு தமிமுன் அன்சாரி கேள்வி!
PulseNews சுருக்கம்

நேபாளத்தில் ஆன்மீக சுற்றுலா சென்ற சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி உடனடியாகத் தலைமைச் செயலக அதிகாரிகளிடம் பேசி, அவர்களது நிலை குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்.

மேலும், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சட்டமன்றத்திலும் அவர் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், "இது நியாயமா?" என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics