அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகனின் தலைக்கு ரூ.95 கோடி பரிசு: ஈரான் அரசு ஊடக அறிவிப்பால் பதற்றம்
ஈரான் - அமெரிக்கா இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 20 வயது மகன் பாரன் ட்ரம்பை எங்கு, எப்படிக் கொல்வது என்பது குறித்த விவரங்களுடன் கூடிய ‘வேர் டு கில் பாரன்’ என்ற தலைப்பிலான வீடியோவை ஈரானிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 20 வயது மகன் பாரன் ட்ரம்பைக் கொல்பவர்களுக்கு 95 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது.
மேலும், பாரன் ட்ரம்ப் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அவரை எவ்வாறு கொல்வது என்பது குறித்த வழிமுறைகளை உள்ளடக்கிய ‘வேர் டு கில் பாரன்’ என்ற தலைப்பிலான வீடியோ ஒன்றையும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.