இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள்... ஸ்டாலின் தான் பெஸ்ட்; சி.ஜே.பி நிறுவனர் அபிஜித் தீப்கே
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சமீபத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் வெற்றிக்கு பிறகு இந்த கட்சி மேலும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் பள்ளிகளுக்கு சென்று, அங்குள்ள கட்டமைப்புகளைப் பார்வையிட்டு வருவதாக கூறப்படுகிறது. மகப்பேறு வார்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து... 15 பிஞ்சு குழந்தைகள் பலி; பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கரம் அவர் செல்லும் இடங்களில் கட்டமைப்பு மோசமாக இருந்தால், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அபிஜித் தீப்கேவிடம் 'இந்தியாவில் சிறந்த முதலமைச்சர் யார்?' என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்களில் ஒருவர். அவர் பொருளாதாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு வந்திருந்தார். கேரளாவில் பினராயி விஜயன் கல்வி மற்றும் சுகாதார மாதிரியை மிக நன்றாக அமைத்தார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலும் பள்ளிகள் மற்றும் சுகாதாரத் துறையில் நன்றாக பணியாற்றி இருக்கிறார். நேர்மையாக சொல்ல வேண்டுமானால், இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். நன்றாக பணியாற்றி இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, இந்தியாவின் சிறந்த முதலமைச்சராகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைத் தேர்வு செய்துள்ளார். அக்கட்சியின் தொடக்கம் முதலே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் போராட்ட வெற்றிக்குப் பிறகு இது மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிக் கட்டமைப்புகளை ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படும் அபிஜித் தீப்கே, ஸ்டாலினைச் சிறந்த முதலமைச்சராகக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனை மகப்பேறு வார்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த துயரச் சம்பவமும் பதிவாகியுள்ளது.