PulseNews
அரசியல்

“இந்தியாவில் தலித்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்கிறது” - ராகுல் காந்தி வேதனை!

உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தேசிய தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டு உரையாற்றினார். இதனையடுத்து கார்கே பேசிய இடத்தில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் சார்பில் சுத்திகரிப்பு யாகம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பட்டியலின வகுப்பைச் சேர்ந்த கார்கே நின்று பேசிய அந்த இடத்தை ஆர்.எஸ்.எஸ்ஸின் கிளை அமைப்பான இந்து அமைப்பு சுத்தம் செய்தது டு முழுவதும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி இன்று (29-08-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றிய பிறகு அங்கு சுத்தம் செய்தது தீண்டாமைச் செயல். அவர்கள் மீது எஸ்சி/எஸ்டி (SC/ST) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். இது குற்றம், இந்திய அரசியலமைப்பின்படி, இது ஒரு குற்றம். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதைச் செய்கிறார்கள். இது கார்கேவின் பிரச்சினை அல்ல; இந்தியாவின் மிகச்சிறிய குழந்தை முதல் முதியவர் வரையிலான ஒவ்வொரு தலித் நபரின் பிரச்சினை இது. தலித்துகள் எதிர்கொள்ளும் பாகுபாட்டிற்கு ஒரு உதாரணமாகவே இதை பார்க்க வேண்டும். இன்றும் கூட, பள்ளிகளில் தலித் குழந்தைகள் கழிவறைகளைச் சுத்தம் செய்யப் பணிக்கப்படுகிறார்கள். அவர்கள் பெருக்கவும், தரையைத் துடைக்கவும் வைக்கப்படுகிறார்கள். கிணறுகளில் தலித்துகள் தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படுவதில்லை. தேநீர்க் கடைகளில் இரண்டு வகையான கோப்பைகள் பயன்படுத்தப்படுகிறது. ஒன்று மீண்டும் கழுவிப் பயன்படுத்தக்கூடிய கண்ணாடிக் கோப்பை, மற்றொன்று பயன்படுத்தியதும் தூக்கி எறியக்கூடிய காகித அல்லது பிளாஸ்டிக் கோப்பை. பிளாஸ்டிக் மற்றும் காகிதக் கோப்பைகள் தலித்துகளுக்கும், கண்ணாடிக் கோப்பை மற்றவர்களுக்கும் உரியவை. ஒரு தலித் நபரின் குரல் எவ்வளவு உரத்ததாகவோ அல்லது எவ்வளவு வெற்றிகரமானவராகவோ இருக்கிறதோ, அந்தளவுக்கு அவர் கடுமையாகத் தாக்கப்படுகிறார். நாட்டில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒன்று இந்தியாவின் அரசியலமைப்பு, அதாவது அம்பேத்கர், காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் படேல் ஆகியோரின் அரசியலமைப்பு. இரண்டாவது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் சித்தாந்தம். இந்த நாட்டில் தலித்துகள் முன்னேறுவதை அவர்கள் விரும்பவில்லை. தலித்துகள் கண்ணியத்துடன் வாழ்வதையும் வெற்றி பெறுவதையும் அவர்கள் விரும்பவில்லை” என்று கூறினார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“இந்தியாவில் தலித்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்கிறது” - ராகுல் காந்தி வேதனை!
PulseNews சுருக்கம்

உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசி முடித்த அந்த இடத்தை, ஸ்ரீராம் சேனா அமைப்பினர் யாகம் நடத்தி சுத்திகரித்ததாகக் கூறப்படுகிறது.

பட்டியலினத்தைச் சேர்ந்த கார்கே பேசிய இடத்தைச் சுத்தம் செய்த இந்தச் செயல், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பான இந்து அமைப்பால் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான பாகுபாடு இன்றும் தொடர்வது மிகுந்த வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics