PulseNews
அரசியல்

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: 5,000 போலீஸ் பாதுகாப்பு; அரசியல் தலையீட்டிற்கு இடமில்லை!

மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு: அனைத்து முன்னேற்பாடுகளும் சிறப்பாக நடைபெறுகிறது – அமைச்சர் நிர்மல் குமார்

அமைச்சர் ஆய்வு

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று இரண்டாவது முறையாக கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தெற்கு, சோழவந்தான், மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுடன் கோயிலுக்குள் சென்ற அமைச்சர், விமானப் பகுதிகள், முக்கியஸ்தர்கள் அமரும் இடம், பக்தர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கீழிருந்து மேலே சென்று வருவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.

அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பு

பின்னர் அம்மன் சன்னதி வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார்..," குடமுழுக்கு விழாவுக்காக கடந்த வாரம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், தற்போது மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குடமுழுக்கு விழாவிற்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருவதாகவும், அனைத்து முன்னேற்பாடு பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். குடமுழுக்கு விழாவின்போது பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுமார் 5,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், வீர வசுந்தராயர் மண்டபம் நாளை திறக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்..," குடமுழுக்கு விழா அழைப்பிதழில் திமுகவைச் சேர்ந்த அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறாதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “அறநிலையத்துறையில் ஏற்கனவே திமுக நிர்வாகிகள் உள்ளனர். இந்த ஆட்சியில் அதெல்லாம் நடக்காது. உண்மையான பக்தர்களாக இருந்து கோயிலுக்கு சிறப்பாக பணியாற்றக்கூடியவர்கள்தான் அறங்காவலர் குழுவில் இடம்பெறுவார்கள். திமுகவினருக்கும், கட்சி சார்ந்தவர்களுக்கும் இங்கு வேலை கிடையாது” என்றார். மேலும், மீனாட்சி அம்மன் கோயில் எந்த ஒரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல என்றும், கோவிலுக்காக பணியாற்றக்கூடியவர்களே அறங்காவலர் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் கூறிய அவர், “மீனாட்சி அம்மன் கோயில் விவகாரத்தில் அரசியல் தலையிட வேண்டாம். தனிப்பட்ட நபர்களின் பெயரை பதிவு செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அழைப்பிதழில் ‘அறங்காவலர்கள் குழு’ என இடம்பெற்றுள்ளது. அதுவே போதுமானது” என்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தினந்தோறும் வீடியோ வெளியிட்டு தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “தன்னுடைய இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக ஏதாவது ஒன்றை ஆர்.பி. உதயகுமார் பேசிக்கொண்டிருக்கிறார். இன்னும் ஆறு மாதத்தில் அதிமுகவில் எடப்பாடி தேவையில்லை, நானே போதும் என்று அவரே சொல்லிவிடுவார். ஓ.பன்னீர்செல்வம் தேவையில்லை, சின்னம்மாவை முதல்வராக்குங்கள் என்று முதலில் சொன்னதும் ஆர்.பி. உதயகுமார் தான்” என்று விமர்சித்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் தொடர்பாக சட்டப்பேரவையில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேசியது சர்ச்சையானது குறித்து கேட்டபோது, திமுகவினர் தங்களது பெயரை நிலைநாட்டிக் கொள்வதற்காக ஜல்லிக்கட்டு மைதானத்தை கட்டியதாக அமைச்சர் விமர்சித்தார். “உணர்வு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவர்களுக்கான விளம்பரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என ஒவ்வொரு பகுதியிலும் பாரம்பரியமாக அவரவர் பகுதியில் உள்ள வாடிவாசல்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருவது அனைவருக்கும் தெரியும்” என்றார்.

காலையில் நடைபெற்ற விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சியில் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது குறித்து கேட்டபோது, “அது அவர்களுடைய பள்ளி நிகழ்வு. அதில் நாம் தலையிட முடியாது” என்று பதிலளித்தார். மேலும், மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவின்போது அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான அனுமதி ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், ஊடகங்களுக்கென தனி இடம் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். குடமுழுக்கு விழாவை நேரலை செய்வதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும், நேரலைக்கான YouTube இணைப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: 5,000 போலீஸ் பாதுகாப்பு; அரசியல் தலையீட்டிற்கு இடமில்லை!
PulseNews சுருக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா வரும் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேரில் ஆய்வு செய்தார். விழாவை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குடமுழுக்கு விழாவிற்காக சுமார் 5,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விழாவில் எவ்வித அரசியல் தலையீட்டிற்கும் இடமளிக்கப்படாது என்றும், பணிகள் குறித்து அமைச்சர் இரண்டாவது முறையாக ஆய்வு மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics