PulseNews
அரசியல்

11 வகுப்பு மாணவிக்குத் தடை; ”அதைத் தீர்மானிக்க நீதிபதிகள் யார்?”- ஓவைசி கண்டனம்

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் 11 ஆம் வகுப்பில் சேர விரும்பிய மாணவி ஒருவர் பள்ளி சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மாணவியின் இந்த மனுவை ஆகஸ்ட் 21 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில், பள்ளி சீருடை விதிமுறைகளைத் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் மாற்றிக்கொள்ள மாணவர்களுக்கு உரிமை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தில் கட்டாயம் அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு, ”அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹா முஸ்லிம் கட்சி”யின் தலைவரும், ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். மேலும், ”இத்தீர்ப்பு இஸ்லாத்தின் மீதான தாக்குதல். இஸ்லாத்தில் எது அத்தியாவசியம்? என்பதை நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது. சீருடையில் மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பது சமத்துவம் ஆகாது. சமத்துவம் என்பது மாணவர்களின் மனதில் தான் இருக்க வேண்டும். இது எங்கள் மதம்; இதில் எது அவசியம் என்பதை நாங்களே முடிவு செய்வோம். அதைத் தீர்மானிக்க நீதிபதிகள் யார்? இது அரசியல் சாசனம் 19 மற்றும் 25க்கு எதிரானது” என்று தெரிவித்துள்ளார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
11 வகுப்பு மாணவிக்குத் தடை; ”அதைத் தீர்மானிக்க நீதிபதிகள் யார்?”- ஓவைசி கண்டனம்
PulseNews சுருக்கம்

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதி கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 21 அன்று அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பள்ளி சீருடை விதிமுறைகளைத் தனிப்பட்ட விருப்பத்தின்படி மாற்றிக்கொள்ள மாணவர்களுக்கு உரிமை இல்லை என்று நீதிபதிகள் இந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டனர். இதனிடையே, நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசதுத்தீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics