பட்டணம் பொன்மலைஸ்ரீ மகா வாராஹி அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சி பொன்மலையில் உள்ள ஸ்ரீ மகா வாராஹி அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி இன்று பால்குடம்மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் முளைப்பாரி எடுத்தும் பக்தர்கள் சிலர் அம்மன் வேடம் அணிந்தும், கலப்பைகளை கைகளில் ஏந்தியும் ஊர்வலமாக வந்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகிலுள்ள பட்டணம் பேரூராட்சி பொன்மலை ஸ்ரீ மகா வாராஹி அம்மன் கோவிலில், நாளை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று நடைபெற்ற ஊர்வலத்தில் பால்குடம் மற்றும் முளைப்பாரியுடன் பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். மேலும், பக்தர்கள் சிலர் அம்மன் வேடமிட்டும், கைகளில் கலப்பைகளை ஏந்தியும் வந்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.