என் அப்பாவுக்கு ஒரு பெரிய அட்வான்டேஜ் இருந்தது; ஆனால் ஜே.சி.டி பிரபாகருக்கு அது இல்லை: பி.டி.ஆர் பாராட்டு
தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைத்துள்ள நிலையில் சட்டசபை சபாநாயகராக ஜே.சி.டி பிரபாகர் உள்ளார். இவர் சட்டசபையை சிறப்பாக நடத்துகிறார் என்று சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியதாக கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். சீனால 2 மணிநேரம்; சிங்கப்பூர்ல ஜஸ்ட் 5 நிமிஷம் தான்: ஐரோப்பாலாம் ரொம்ப மட்டம்... ஆடிப்போன ஸ்பெயின் பயணி இந்நிலையில், தமிழக சட்டசபையை மிகவும் சிறப்பாக நடத்துகிறார் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் என முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்க வகையில் இருக்கின்றன. அவரது குடும்பத்தினரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். அப்போது அவருடைய மகள், மகன் எல்லாம் என்னிடம் வந்து பாசத்துடன் பேசினார்கள். நான் அமைச்சராக இருந்த போது அவர்கள் எனது செயல்பாடுகளை பாராட்டினார்கள். உடனே நான் சொன்னேன், அதெல்லாம் இருக்கட்டும், எனக்கு தெரிந்து ஜே.சி.டி பிரபாகர் சபாநாயகராக சிறப்பாக செயல்படுகிறார். எனது தந்தையை சிறந்த பேரவைத் தலைவர் என சொல்வதுண்டு. ஆனால் என் அப்பாவுக்கு ஒரு பெரிய அட்வான்டேஜ் இருந்தது. அதாவது அவர் காலத்தில் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆளும் கட்சியிலும் நல்ல அனுபவசாலிகளாக இருந்தனர். அதனால் அந்த அவையை நடத்துவது ரொம்ப எளிது. ஆனால் தற்போது எதிர்க்கட்சியும் ஆளும்கட்சியும் சமமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதிலும் புதியவர்கள் 99 சதவீதம் பேர் இருக்கிறார்கள். எனவே என் அப்பா நடத்திய அவையை விட ஜே.சி.டி பிரபாகர் நடத்தும் அவையை நடத்துவது மிகவும் கடினம். இத்தனை இக்கட்டான சூழலிலும் அவையை சிறப்பாக நடத்துகிறார், எனக்கு ஜே.சி.டி பிரபாகருடன் எந்த பழக்கமும் இல்லை. அவரை நான் பார்த்தது கிடையாது. அவரது செயல்பாடுகளும் எனக்கு தெரியாது. வெளிநாடு, வெளிமாநிலங்களில் பார்த்திருக்கிறேன், ஜே.சி.டி மிகவும் சூப்பராக செயல்படுகிறார். வரலாற்றில் ஜே.சி.டி பிரபாகருக்கு ஒரு சிறப்பான இடம் கொடுத்தே ஆக வேண்டும் என பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி சட்டசபை சபாநாயகரான ஜே.சி.டி பிரபாகர், எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி. எம்.ஜி.ஆருடன் பயணித்த போது "எனக்கு ஒரு பெண் பிள்ளை இருந்திருந்தால் அவரை பிரபாகருக்கு திருமணம் செய்து கொடுத்திருப்பேன்" என எம்.ஜி.ஆர் கூறினாராம். இதுநாள் வரை ஊழல் வழக்குகளில் சிக்காதவர். கிளீன் இமேஜ் கொண்டிருக்கிறார். இதனால் இவரை சபாநாயகராக தேர்வு செய்தது ஆளும் கட்சியின் நல்ல ஒரு முடிவாக பார்க்கப்படுகிறது. ஜே.சி.டி பிரபாகர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இருவருக்கும் நடுநிலையோடு பதிலளித்து வருகிறார். எதிர்க்கட்சியினரை ஆளும் கட்சியினர் தேவையில்லாமல் தாக்கி பேசினால் அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுகிறார். இதுவரை ஆளும்கட்சியில் முதல்வர் விஜய், செங்கோட்டையனை தவிர ஆதவ், நிர்மல் குமார், ராஜ்மோகன், ரமேஷ் உள்ளிட்டோர் பேச்சுக்கு பல முறை சபாநாயகர் தடை விதித்து கண்டித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மிகச் சிறப்பாக வழிநடத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பாராட்டியுள்ளார். தனது தந்தைக்கு இருந்த ஒரு பெரிய சாதகம் ஜே.சி.டி. பிரபாகருக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சபாநாயகர் பிரபாகரின் செயல்பாடுகளை முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியதாக கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது த.வெ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பிரபாகர் சபாநாயகராகப் பொறுப்பு வகிக்கிறார்.