PulseNews
அரசியல்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 7வது நாளாகத் தொடர் முற்றுகைப் போரா*ட்டம்!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 7-வது நாளாகத் தொடர் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது துணைவேந்தர் குழு உறுப்பினர், பதிவாளரைப் பதவி விலகக் கோரிக்கை வைக்கப்பட்டது. அண்ணாமலைப்பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் ஓய்வு பெற்று 2 ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பயன்கள் வழங்காததைக் கண்டித்தும், உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அலுவலகங்களை முற்றுகையிட்டுத் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாவிட்டால் துணைவேந்தர் குழு உறுப்பினர், பதிவாளர் ஆகியோர் பதவி விலக வேண்டும், கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 7வது நாளாகத் தொடர் முற்றுகைப் போரா*ட்டம்!
PulseNews சுருக்கம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தங்களின் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஏழாவது நாளாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி ஓய்வு பெற்ற இரண்டு ஆண்டுகளாகியும் ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்கள் வழங்கப்படாததைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் மற்றும் பதிவாளர் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நிலுவையில் உள்ள ஓய்வூதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்த முற்றுகைப் போராட்டம் தொடர்கிறது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics