யாதவா கல்லூரியின் கல்வி நிதி சங்க தேர்தல் திட்டமிட்டபடி நாளை நடத்த அனுமதி வழங்கி உத்தரவு !

யாதவ கல்வி நிதி சங்கத்தின்” தேர்தல் நடத்த தடை இல்லை தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவை நீக்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு.

யாதவர் கல்வி நிதி சங்கத்தின் தேர்தல்

மதுரை யாதவா கல்லூரியை நிர்வகித்து வரும் 'யாதவர் கல்வி நிதி சங்கத்தின் தேர்தலுக்கு தனி நீதிபதி பிறப்பித்த தடையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து 29-8-2026 சனிக்கிழமை தேர்தல் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மதுரை திருப்பாலை பகுதியில் அமைந்துள்ள பிரபல யாதவர் கல்லூரியை நிர்வகித்து வரும் 'யாதவர் கல்வி நிதி' சங்கத்தின் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் க்கிழமை நடைபெற திட்டமிடப்பட்டு அதற்கான தேர்தல் நடத்தும் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்றி இந்த தேர்தல் நடத்தப்படுகிறது இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த விநாயகம் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி முன்பு தேர்தல் முறைகேடாக நடைபெறுவதாக வழக்கு தாக்கல் செய்து இடைக்கால தடை பெற்றுள்ளார். ஆனால் தேர்தல் விதிகளின் படி முறையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை தடை செய்து நாளை தேர்தல் நடத்த அனுமதிக்க வேண்டுமென மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல் திட்டமிட்டபடி நாளை நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன் சக்திவேல் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. தேர்தல் அதிகாரி கார்த்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவன் யாதவா கல்லூரி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆகியோர் ஆஜராகினார்கள். கல்லூரி கல்வி நிதி சங்கத்தின் தேர்தல் சங்க பதிவு சட்டங்களின்படி முறையே பின்பற்றி நடத்தப்படுகிறது. சில விதிகளை தனி நீதிபதி கவனிக்க தவறிவிட்டார் எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடைவிதித்து யாதவா கல்லூரியின் கல்லூரி நிதி சங்க தேர்தல் திட்டமிட்டபடி நாளை நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர்.

மதுரை யாதவா கல்லூரியை நிர்வகிக்கும் யாதவர் கல்வி நிதி சங்கத் தேர்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தனி நீதிபதி பிறப்பித்திருந்த தடை உத்தரவை ரத்து செய்வதாக இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அறிவித்துள்ளது.
இதன் மூலம் திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.