PulseNews
அரசியல்

இம்ரான் கான் உயிரோடு இல்லையா? அமெரிக்கா அதிரடி தலையீடு... இஸ்லாமாபாத்தை நோக்கி 20 லட்சம் பேர் பேரணி

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கான், ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது. இந்நிலையில், இம்ரான் கான் உயிரோடு இல்லை என ராணுவ மூத்த அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என அமெரிக்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீங்க ராஜாவாவே இருந்தாலும் தவழ்ந்து தான் போகணும்... நீச்சல் தெரியலேனா ஆளே அவுட்; ஓமனில் மறைந்திருக்கும் சொர்க்கம் இருப்பினும், இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இம்ரான் கானை அவரது குடும்பத்தினர், வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் சந்திக்க பாகிஸ்தான் அரசு தொடர்ந்து தடை விதித்து வருவதே இதுபோன்ற சந்தேகங்களுக்கும் வதந்திகளுக்கும் முதன்மை காரணமாக அமைந்துள்ளது. வீடியோவில் பத்திரிகையாளர் கூறியது என்ன? ஆகஸ்ட் 10 அன்று யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் வஜாஹத், "பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள 3 மூத்த அதிகாரிகள் இம்ரான் கான் உயிருடன் இல்லை என அஞ்சுவதாகத் தெரிவித்தனர். அவர்கள் நேரடியாக எதையும் பார்க்கவில்லை; ஆனால் கேள்வியுற்ற தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். அவர் உயிருடன் இல்லாததாலேயே ராணுவத் தளபதி அவரை யாரையும் சந்திக்க விடாமல் மறைத்து வைக்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது. இது உண்மையல்ல என நானும் நம்புகிறேன்" என்று கூறியுள்ளார். கடந்த 2025 நவம்பரிலும் இதுபோன்ற வதந்திகள் பரவியபோது, டிசம்பரில் அவரது சகோதரி உஸ்மா கானம் நேரில் சந்தித்து அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 20 லட்சம் பேருடன் இஸ்லாமாபாத் முற்றுகை - பி.டி.ஐ எச்சரிக்கை இம்ரான் கானைச் சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்து, கய்பர் பக்துன்க்வா முதலமைச்சர் மற்றும் பி.டி.ஐ தலைவர் சோஹைல் அப்ரிடி அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார், வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி இஸ்லாமாபாத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும். அதற்கு முன்பாக அவரது குடும்பத்திற்கும் மருத்துவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டால், உச்சநீதிமன்றம் மற்றும் அடியாலா சிறை முற்றுகையிடப்படும். சுமார் 20 லட்சம் இளைஞர்கள் வீதிக்கு வரத் தயாராக உள்ளனர் என்று தெரிவித்தனர். IMRAN KHAN COULD BE DEAD. Senior Pakistani 🇵🇰 journalist Wajahat S Khan says at least three military officers have told him the jailed PM may not be alive. Which is why there has been no public appearance for long. Did they kill him in captivity? pic.twitter.com/4sv2a6UgXT — Abhijit Majumder (@abhijitmajumder) August 11, 2026 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபியின் சிறை நிலைமை குறித்து கவலை தெரிவித்து, அமெரிக்காவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், இம்ரான் கான் நாளொன்றுக்கு 23 மணி நேரம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது பார்வைத்திறன் 85% வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி பாகிஸ்தான் அரசிடம் இது குறித்துப் பேசுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இம்ரான் கான் ஏன் சிறையில் இருக்கிறார்? அல்- காதிர் டிரஸ்ட் ஊழல் வழக்கு : 190 மில்லியன் யூரோ மதிப்புள்ள ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023 மே 9 அன்று ராணுவ முகாம்கள் மீதான தாக்குதல் தொடர்பான பல்வேறு வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் இம்ரான் கானுக்கு இடையேயான நீண்டகால அரசியல் மோதலே இந்த நிலைமைக்குக் காரணம் என அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். செப்டம்பர் 27 பேரணிக்கு முன்பாக இம்ரான் கானின் நிலை குறித்து பாகிஸ்தான் அரசு வெளிப்படைத்தன்மையுடன் தகவல்களை வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இம்ரான் கான் உயிரோடு இல்லையா? அமெரிக்கா அதிரடி தலையீடு... இஸ்லாமாபாத்தை நோக்கி 20 லட்சம் பேர் பேரணி
PulseNews சுருக்கம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான், ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் ஓராண்டுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் உயிருடன் இல்லை என ராணுவ உயர் அதிகாரிகள் சந்தேகிப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், இம்ரான் கானின் நிலை குறித்து அமெரிக்கா தலையீடு செய்துள்ள நிலையில், இஸ்லாமாபாத்தை நோக்கி 20 லட்சம் பேர் பேரணி நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வுகள் பாகிஸ்தான் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics