ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: இரகசியமாக விமானம் மாற்றப்பட்டதை ஒப்புக்கொண்டார் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறியபோது, இரகசியமாக விமானம் மாற்றப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். அச்சுறுத்தல்கள் காரணமாக அவ்வாறு செய்ய வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். "நான் இரகசிய சேவை மற்றும் இராணுவத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றினேன். அவர்கள் என்னை வேறு விமானத்தில் பயணிக்க வைக்க விரும்பினர்,""அவர்கள் சொல்வதை நான் செய்ய வேண்டும்." என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். விமானம் மாற்றப்பட்ட ...

கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து திரும்பியபோது, ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக தனது விமானம் இரகசியமாக மாற்றப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவம் மற்றும் இரகசிய சேவையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி வேறு விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர்களின் வழிகாட்டுதலுக்குத் தான் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.