கவர்னர் ரஜினி? பா.ஜ.க. புது மூவ்!
"ர ஜினிகாந்த் என்கின்ற மந்திர சொல்லின் ஈர்ப்புவிசை அறியாதவர்கள் யாருமில்லை. இதோ அரசியலுக்குள் வந்துவிடுவார். அதோ வந்துவிடுவார் என அனைவரும் காத்திருக்க "அரசியல்' தெரிந்தும் அரசியலுக்குள் வர விரும்பவில்லை அவர். 1996ம் ஆண்டு வாக்கில் தி.மு.க. -த.மா.கா. கூட்டணியை ஆதரித்தது, அதற்கடுத்த நாடாளுமன்றத் தேர்தல்களில் என்னுடைய வாக்கு தாமரைக்கே.! என்றது அவரது அரசியல் ஞானத்தை மட்டும் எடுத்துக்கூறியது. எனினும் நேரடியாக அரசியலுக்குள் வரவில்லை அவர். அரசியலே வேண்டாம் என ஒதுங்கியபோதுதான் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், "நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தல், தமிழக வளர்ச்சி உள்ளிட்ட காரணிகளை முன்வைத்து தமிழகத்தில் மாற்றத்தை விரும்புவோர் ஒன்றுசேரலாம்'' என, தனது மக்கள் மேடை மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தார். ஆனால் ரஜினியிடமிருந்து எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ரஜினியின் ஆதரவு இல்லையென்றாலும், ஆசி இருந்தால் போதுமானது என அடுத்தகட்டங்கள் நகர்ந்தது. இந்த நிலையில் ரஜினிகாந்திற்கு கவர்னர் பதவி என்கின்ற செய்தி வெளியானதில் மகிழ்ச்சியே. இதுபோல் 2023ஆம் ஆண்டு செய்தி பரவியது. எனினும் இது உண்மையாக இருக்க வேண்டுமென்பது என்னைப்போல் ரசிகர்களின் ஆசை" என்கின்றார் கல்லல் பகுதியை சேர்ந்த ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர். நடிகர் ஜோசப் விஜய்க்கும், ரஜினிகாந்திற்கும் கருத்து வேறுபாடு! ரஜினி குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வரம்பு மீறி பேசியதை ஜோசப் விஜய் ரசித்ததும், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தோல்வியுற்றபோது "நான் இருக்கின்றேன்' என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆறுதலளித்ததும் ரஜினிகாந்த், ஜோசப் விஜய் ரசிகர்களிடையே கடும் பகைமையை உண்டாக்கியது. "உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது' என வலைத்தளங்களில் இது எதிரொலித்தது. எனினும் ரஜினிகாந்த் இதனைக் கண்டு கொள்ளவில்லை. "விஜய் முதல்வரானதில் ரஜினிக்குப் பொறாமையென வதந்திகள் வைரலானபோது, "விஜய் சி.எம். ஆகக்கூடாது... பவருக்கு வரக் கூடாதுனு தடுக்க ரெண்டு கட்சிகளை இணைக்க ஸ்டாலினைப் பார்க்கப் போயிருக்கேன்னு என்னவெல்லாமோ விமர்சனம் வருது. அப்படிப் பேசுற தரங்கெட்ட ஆள் இல்லை நான். இரண்டாவது விஜய் ஜெயிச்சதும் நான் அவருக்கு வாழ்த்துச் சொல்லலைங்கிறாங்க. அவர் ஜெயிச்சதுமே எக்ஸ் தளத்துல என் வாழ்த்துகளைப் பதிவிட்டேன். அரசியலிலே நான் இல்லை. பிறகு எனக்கு விஜய் மேல ஏன் பொறாமை?. அவர் ஜெயிச்சதுல ஆச்சர்யம் கலந்த சந்தோஷம் தான்''’என மே 17ஆம் தேதி போயஸ் கார்டன் வீட்டில் ரஜினி பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, தெளிவுபடுத்தியிருந்தார். இந்த நிலையில் "கவர்னர் ரஜினி' என்கின்ற ஹேஷ்டேக் வலைத்தளத்தில் வைரலானது. உக்கடம் ரஜினி மன்ற நிர்வாகி ஒருவரோ, "ஜோசப் விஜய் முதலமைச்சரானால் எங்களுக்கு என்ன? திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி. திரையுலகில் அவர் செய்யாத சாதனைகளே இல்லை. அப்படியிருக்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட ஒன்றுமே தெரியாத ஆட்கள் ரஜினியை வசைபாடியதை ரசிக்கலாமா? இது மூத்த கலைஞனுக்கு செய்யும் அவமரியாதை அல்லவா? எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும். அதனை ஜோசப் விஜய் உணரவில்லை. மாறாக ரஜினியின் படங்கள் குறித்து கமெண்ட் அடிப்பதை ரசிக்கின்றார். ஆகையால்தான் ரஜினிகாந்த் கவர்னராக பதவியேற்பதை வரவேற்கிறோம்'' என்கிறார். தொடர்ச்சியாக மூன்று படங்கள் வரிசைகட்டி நிற்க, தற்பொழுது "தர்மன்' திரைப்படத்தின் இரண்டாம்கட்டப் படப் பிடிப்பில் இருக்கின்ற ரஜினிகாந்த் சாதாரண ரசிகர் சண்டை, அதிகாரப் போட்டியை உருவாக்கியிருக்கின்றது என்பதனை அறியாமல் இல்லை. இந்த நிலையில், "ரஜினிகாந்த் "இம்மென்று' கூறட்டும். அவருக்கு கவர்னராக மகுடம் சூடத் தயார். அவரால் தமிழ் நாட்டில் கவர்னராக பதவியேற்க இயலாது என அரசியலமைப்பு சட்டம் கூறினாலும் அண்டை மாநிலமான கேரளாவில் அவரை கவர்னர் ஆக்குகின்றோம். அவர் அங்கிருந்து கொண்டே கூடுதல் பொறுப்பாக தமிழ்நாட்டை கண்காணிக் கட்டும்'' என அவருக்கான வாய்ப்புடன் தாங்கள் காத்திருப்பதாக பா.ஜ.க. தரப்பில் நம்பகமான தகவலும் வெளியாகியுள்ளது. பா.ஜ.க.வினை பொறுத்தவரை ரஜினியின் பாப்புலாரிட்டியை பயன்படுத்திக்கொள்வது அவர்களது திட்டம் என்கிறது விபரமறிந்த வட்டாரங்கள். "கவர்னர் பதவி குறித்து ரஜினியிடமே கேட்டோம். வழக்கம்போல் நன்றாகச் சிரித்துவிட்டு தலைக்கு மேலே கையை உயர்த்திக் காண்பித்தார். எனினும் இதுகுறித்து நேரடியாக பதில் கூறவில்லையென்றாலும் 'மேலே கையை காண்பிப்பது' ஒருவித சமிக்ஞையே! அதே வேளையில் இதனை மறுக்கவுமில்லை. இந்த நிலையில் ரஜினிகாந்த் கவர்னராக வரும்பட்சத் தில் அனைவருக்கும் நல்லது. ஒரு சிலருக்கு கடிவாளம் கட்டப்படும்'' என சூசகமாகத் தெரிவித்தார் ரஜினியின் நண்பரான அவர்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இருப்பினும், அவர் அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை என்பதைத் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளார். 1996 தேர்தலில் திமுக-தமாகா கூட்டணிக்கு ஆதரவு அளித்தது மற்றும் பொதுத்தேர்தல்களில் பாஜகவுக்கு வாக்கு அளிப்பதாகக் கூறியது அவரது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.
ரஜினிகாந்தை ஆளுநராக்க பாஜக திட்டமிடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேரடி அரசியலைத் தவிர்த்து வந்த ரஜினிகாந்தை, ஆளுநர் பொறுப்பின் மூலம் அரசியலுக்குள் கொண்டு வர அக்கட்சி முயற்சிப்பதாகச் சொல்லப்படுகிறது.