PulseNews
அரசியல்

எடடாமிடத்தில் நின்ற கிரகம் வரமா? சாபமா?

எ ந்த லக்னமாக இருந்தாலும் உடல் காரகன் மனோகாரகன் ஆகிய சந்திரன், அஷ்டம ஸ்தானத்தில் மறைவது சுபமான பலன் அல்ல. காலபுருஷன் எட்டாம் இடத்தில் சந்திரன் நீசமானால் ஏற்படக்கூடிய அனைத்து பலன்களும் ஜாதகருக்கு நடக்கும். வெளியில் சொல்ல முடியாத உடல்ரீதியான- மனரீதியான பாதிப்புகள் இருக்கும். உடலையும் ஆன்மாவையும் தனித்தனியாக பிரித்தது போன்ற நடவடிக்கைகள் ஜாதகரீகம் தென்படும். தனிமை விரும்பியாக இருப்பார்கள். யாருடனும் ஒட்ட மாட்டார்கள். இவர்களின் வாழ்க்கையில் நிச்சயமாக ஏதாவது ஒரு மர்மம் இருக்கும். இந்த ஜென்மத்தில் நடைபெற வேண்டிய அனைத்து பாக்கிய பலன்களும் தடைபடும் அல்லது காலதாமதமாக நடைபெறும். குறைந்தது 40 வயதிற்குமேல் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி அதிகம் யோசிப்பார்கள். சிந்திக்கும் திறன் குறைவாக இருப்பதால் சுய தொழிலை தவிர்ப்பது நல்லது. அடிமை தொழில் நல்ல பலன்களை வழங்கும். சொத்துக்களாலும் சொந்தங்களாலும் ஜாதகருக்கு அடிக்கடி மன உளைச்சல் உண்டாகும். தாயுடன் சரியான புரிதல் ஏற்படாது எட்டில் சந்திரன் இருந்தால் மன அழுத்தம், உணர்ச்சிவசப்படுதல், தாயுடன் கருத்து வேறுபாடு மற்றும் திடீர் மாற்றங்கள் உண்டாகும். அதே நேரம் ஆன்மிகம், உள்ளுணர்வு மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். எப்போதும் அதிகப்படியான சிந்தனை, கவலை மற்றும் மனமாற்றம் இருக்கும். தாய் அல்லது வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். யூரினரி இன்ஃபெக்ஷன் கல்லடைப்பு, பைல்ஸ் போன்ற அடிவயிறு சார்ந்த உடல் உபாதைகள் இருக்கும். நீர் சார்ந்த தொந்தரவுகள், கண்டங்கள் தூக்கமின்மை மற்றும் மனச் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆன்மிகம், ஜோதிடம் மற்றும் கூர்மையான உள்ளுணர்வு பெருகும். சுய ஜாதகத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் நிற்கிறாரோ அதற்குத் தகுந்தார்போல் ஆதிபத்திய பலன்கள் நடக்கும். எட்டில் செவ்வாய் : எட்டாம் பாவகம் என்பது ஆண்களுக்கு ஆயுள் ஸ்தானம் . பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானமாகும். இது கடுமையான வாக்கு தோஷம் மற்றும் திருமண தோஷ அமைப்பாகும். எட்டில் நிற்கும் செவ்வாயின் நான்காம் பார்வை 11-ஆமிடமான லாப ஸ்தானத்திலும் சம சப்தம பார்வை, தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திலும் விபத்து பார்வையான எட்டாம் பார்வை மூன்றாம் இடமான சகாய, வெற்றி ஸ்தானத்திலும் பதியும். எட்டாம் இடத்தில் செவ்வாய் இருந்தாலோ அல்லது பார்த்தாலோ ஆணின் ஆயுளுக்கோ பெண்களின் சுமங்கலித்தன்மைக்கும் பங்கம் ஏற்படலாம். லக்னம் வலிமையற்றவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் மிகுதியாக இருப்பதுடன் சிறிய பிரச்சினைக்குகூட கட்டப் பஞ்சாயத்து, கோர்ட் கேஸ் என அலையும் மனோபாவம் உருவாகும். அத்துடன் நான்காம் பார்வையால் பதினொன்றாம் இடத்தைப் பார்ப்பதால் தம்பதிகள் மன ஆறுதலுக்காக புதிய நட்பை தேடுவார்கள். கூடா நட்பு கேடில் முடியும். ஏழாம் பார்வையால் இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் பிரச்சினையில் உழன்று மன வெறுப்படைந்து சந்நியாச எண்ணம் மிகுந்து குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்வார்கள். எட்டாம் பார்வையால் மூன்றாம் இடம் எனும் தைரிய வீரிய ஸ்தானத்தை பார்ப்பதால் பெண்களுக்கு விரக்தி டென்சன், இடம் மாறும் குணம் இருக்கும். ஆண்களுக்கு இயலாமை மன பாதிப்பு ஏற்படும். இல்வாழ்வில் நாட்டமின்மை உள்ளவராக இருப்பார். தூக்கமின்மை மற்றும் உடல் சோர்வு, சோகம், தனிமையுணர்வு நிரம்பி இருக்கும். எந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனப்பான்மை இல்லாத கோழைகளாக இருக்கிறார்கள். ஆண்களுக்கு இல்லற இன்பத்தை குறைப்பார். இல்லற இன்பத்திற்கு தகுதி இல்லாதவராக்குவார். ஆரோக்கிய குறைபாடு, பொருள் இழப்பு மிகுதியாக இருக்கும். சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் நிலையே அதிகமாக இருக்கும். வெளிநாட்டில் வாழ்பவர்களாக இருப்பார்கள் அல்லது சிறையிலும் வாழ்க்கை கழிக்க நேரலாம். இதனால் திருமணத் தடை, தம்பதியரிடையே கருத்து வேறுபாடு, விபத்துகள், ரத்த அழுத்தம் மற்றும் திடீர் பண இழப்புகள் போன்ற தாக்கங்கள் ஏற்படலாம் என்றாலும், செவ்வாய் நின்ற ராசி மற்றும் சுபர்களின் பார்வையைப் பொறுத்து இதன் தீவிரத்தில் மாற்றங்கள் உண்டாகும். எட்டில் செவ்வாய் இருப்பது வலுவான தோஷமாகக் கருதப்படுகிறது; எனவே ஜாதகம் பொருத்திப் பார்த்தே திருமணம் செய்ய வேண்டும். ரத்தம் சார்ந்த பிரச்சனைகள், அறுவை சிகிச்சை அல்லது சிறிய விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். வாக்கில் நிதானம் தேவை. பூர்வீக சொத்துக்களில் சிக்கல், மறைமுக எதிர்ப்புகள் அல்லது திடீர் செலவுகள் வரக்கூடும். ஆராய்ச்சி, மருத்துவம் ஆகிய வற்றில் பெரிய வெற்றி கிடைக்கும். இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளிக்கும் மன உறுதியும், எதற்கும் பயப்படாத தைரியமும் இவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும். மிகச் சுருக்கமாக எட்டாம் இடம் செவ்வாயால் இனம்புரியாத நோய், கடன் பாதிப்பு, நெருப்பு கண்டம், அங்காளி- பங்காளி நண்பர்களால் கவலை, சொத்துக்களால் சண்டை, சச்சரவு, கணவன்- மனைவி சந்தேகம், இடத்தகராறு, கண் பல் சார்ந்த பாதிப்புகள் அதிகரிக்கும். ஒரு ஜாதகத்தில் மூன்றாம் இடம் என்பது மாமனாரை குறிக்கும் இடம் என்பதால் மாமனாரால் ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். எட்டில் புதன் மறைந்த புதன் நிறைந்த பலன் தரும் என்பது ஜோதிட பழமொழி. கால புருஷன் மூன்று ஆறாம் அதிபதியான புதன் எட்டில் மறைவதால் வாழ்க்கையில் ஒரு விபரீதம் ஏற்பட்ட பிறகு வளர்ச்சி உண்டாகும். மறைமுக லாபம் பெருகும். அந்தப் பணம் தொழில் மூலமாக கிடைக்குமா? பூர்வீகச் சொத்திலிருந்து கிடைக்கும் பங்கு பணமா அல்லது அதிர்ஷ்ட பணமா அல்லது பிள்ளை இல்லாச் சொத்தா? என்பது ஜனனகாலரீதியான தசா புக்தியைப் பொறுத்தது. பிறக்கும்போது பொருளாதாரத்தில் மிகத் தாழ்வான நிலையில் இருந்தவர்களுக்குகூட சரளமான பணப்புழக்கம் இருக்கும். அஷ்டமாதிபதி ஒருவருக்கு அதிர் ஷ்டத்தை வழங்க முடிவு செய்துவிட்டால் அதனை யாராலும் அணைபோட்டு நிறுத்த முடியாது. அனைத்து தொழிலில் சார்ந்த அனுபவமும் ஜாதகருக்கு இருக்கும். அவர்களின் புலன்கள் தூங்கும் பொழுதுகூட தொழில் எண்ணங்களில் இருக்கும். நிலையான-நிரந்தரமான தொழில் வெற்றி உண்டு. அதிகமான ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் உள்ளவர்கள். எதுவாக மாற விரும்புகிறார்களோ அதுவாகவே மாறுவார்கள். தன் வாழ்வில் நடக்கும் எத்தகைய நிலை களையும், சம்பவங்களையும் மிகவும் சர்வ சாதாரனமாக எதிர்கொள்வார்கள். திறமையான, திட்டமிட்ட அணுகு முறையுடைய பெருமைக்குரிய சாமார்த்தியசாலியாக திகழ்கிறார்கள். பணம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் லாபம் தரும். புதன் எந்த நிலையில் இருந்தாலும் சுபத்துவமான பலன்களை வழங்குவார். நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அதிகப்படியாக காதல் திருமணத்தை சந்திப்ப வர்கள். வாழ்நாள் முழுவதும் வருமானம் தரக்கூடிய தொழில், உத்தியோகம் இருக்கும். பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழிலில் வல்லவர் கள். அதிக சிரமப்படாமல் சம்பாதிப்பார்கள். வாக்குவன்மை பேச்சு சாதுரியம் நிறைந்தவர்கள். ஜோதிடம், கலைத்துறை, பேச்சுத்துறை, எழுத்துத்துறை என்ன பல்வேறு துறைகளில் தனித்தன்மையுடன் பிரகாசிப்பார்கள். பலவிதமான யோகங்கள் வந்துசேரும். புதனுக்கு செவ்வாய், சனி, ராகு- கேது சம்பந்தம் இருக்கக்கூடாது. புதனுக்கு செவ்வாய் சம்பந்தம் இருந்தால் கல்வியில் தடை, தாமதம் ஏற்படும் கற்ற கல்விக்கு தகுந்த பலன் கிடைக்காது. புதனுக்கு சனி சம்பந்தம் இருந்தால் தொழில் வியாபாரத்தில் ஏமாற்றம், பணத்தால் ஏமாற்றம் அதிகரிக்கும். புதனுக்கு ராகு, கேது சம்பந்தம் இருந்தால் ஆவணங்கள் ஜாமீன் தொடர்பான பிரச்சினைகள், தோல், நரம்பு சார்ந்த பிரச்சினைகள், வலிப்பு, வாத நோய்கள் வரலாம். தொடரும்... செல்: 98652 20406

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
எடடாமிடத்தில் நின்ற கிரகம் வரமா? சாபமா?
PulseNews சுருக்கம்

எந்த லக்னமாக இருந்தாலும், மனோகாரகனான சந்திரன் எட்டாம் இடத்தில் மறைவது சாதகமான பலன்களைத் தராது. காலபுருஷ தத்துவப்படி, எட்டாம் வீட்டில் சந்திரன் நீசம் அடைந்தால், அது ஜாதகருக்கு மன ரீதியான மற்றும் உடல் ரீதியான சொல்ல முடியாத இன்னல்களை ஏற்படுத்தும்.

இவர்கள் தனிமையை விரும்புபவர்களாகவும், மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது வாழ்க்கை மர்மங்கள் நிறைந்ததாகக் காணப்படும், மேலும் உடல் மற்றும் ஆன்மா பிரிந்தது போன்ற உணர்வு இவர்களுக்கு அடிக்கடி ஏற்படும்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics