நிவாரணம் வழங்குவது நீதிக்கான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கை அல்ல! ஆளுநர் எடுத்துரைப்பு
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணத்துடன், அந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். நிவாரணம் வழங்குவது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையாக அமையாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்த...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவது, அவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக அமையாது என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். நீதிக்கான தேடல் பயணத்தோடு இணைந்து, இக்குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான உதவிகளும் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பங்களிப்புடன் இந்த கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார்.