இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்; கரப்பான் பூச்சி கட்சியினர் புகழாரம்
நீட் போராட்டத்தினை தொடர்ந்து, தற்போது ”கரப்பான் பூச்சி மக்கள் கட்சி”யினர் (சிஜேபி) நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ”பள்ளிகளைச் சரி செய்யுங்கள்” என்ற பிரச்சாரத்தை சிஜேபியினர் முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் கரப்பான் பூச்சி கட்சியினர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், அப்பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் இன்றி மிக மோசமான நிலையில் இருப்பது தெரியவந்தது. இந்த ஆய்வினை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தின் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் மிக மோசமான நிலையில் இருப்பதும் தெரியவந்தது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறிய நிலையில், மாணவர்களுக்கு வகுப்பறை கட்டிடம் கூட இல்லாத அந்த பள்ளிக்கு, தற்போது கட்டிடம் கட்ட ரூ.18 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது கரப்பான் பூச்சி கட்சியினருக்குக் கிடைத்த அடுத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவரிடம் இந்தியாவின் சிறந்த முதல்வர் யார்? என்று கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், ”தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்களில் ஒருவர் ஆவார். அவர் பொருளாதாரத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வந்திருந்தார். அதே போல, கேரளத்தின் முதல்வராக இருந்த பினராயி விஜயன் கல்வி மற்றும் சுகாதாரத்துறையைச் சிறப்பாக வழி நடத்தியுள்ளார். அதே போல, டெல்லியில் கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் மற்றும் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டதில் அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் சிறந்த முதல்வராக பார்க்கப்படுகிறார்” என்று தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து, கரப்பான் பூச்சி மக்கள் கட்சி (CJP) தற்போது அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. 'பள்ளிகளைச் சரி செய்யுங்கள்' என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஜெய்ப்பூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் அக்கட்சியினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், அந்தப் பள்ளியின் வகுப்பறைகள் கட்டிட வசதிகள் ஏதுமின்றி மிக மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. நாட்டின் சிறந்த முதல்வராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய கரப்பான் பூச்சி கட்சியினர், தற்போது பள்ளிகளின் அவலநிலை குறித்து இவ்வாறான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.