PulseNews
அரசியல்

பிக்பாஸ் காமன்மேன் ஒரு fake.. “அப்பாவின் இறப்பைக் கேட்டுவிட்டு வாய்விட்டு சிரிச்சாங்க ஓவியா, மாயா” அடுத்தடுத்து வெளியாகும் சர்ச்சை!

'பிக் பாஸ்' வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்று ஆசை கனவுகளுடன் வரும் காமன் மேன்களுக்கு நுழைவு தேர்வுபோல் அமைந்தது, ‘பிக் பாஸ் தி காமன் மேன்’ நிகழ்ச்சி. ஆனால், இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிலர் தங்களுக்கு நடந்த அனுபவங்களை பற்றி தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் மாறனின் மகள் நிவ்யா மாறன், நடிகர் ஆரி மீதும் அந்த ஷோ மீதும் “அவன் இவன்...” என்கிற ரேஞ்சுக்கு கடுமையாக விமர்சித்து வருவதுதான்சமூக வலைதளத்தில் பரவி விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. நகைச்சுவை நடிகர் மாறன் என்றால் பெயரில் குழப்பங்கள் ஏற்படலாம். விஜய் நடிப்பில் வெளியான 'கில்லி', 'குருவி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மாறன். இது தவிர்த்து 'டிஷ்யூம்', 'பாஸ் என்ற பாஸ்கரன்', 'வேட்டைக்காரன்', 'பட்டாஸ்', ‘சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஆனாலும், தலைநகரம் படத்தில் எவண்டா என் திவ்யாவுக்கு நூல் விட்டவன் என வடிவேலு போய் வம்பிழுக்க, “நான் தான் இப்போ இன்னா பண்ணப்போற?” என கேட்டுவிட்டு வடிவேலுவின் வயிற்றிலேயே குத்தி கன்னத்தில் அறையும்போது வடிவேலு ஒண்ணு... ரெண்டு...மூணு என எண்ணிக்கொண்டிருப்பார். அப்போது, அவர் மூணு அடிக்குமேல போனா திருப்பி அடிக்கிற மாறியே எண்ணுற?” என்ற காமெடி காட்சியின் மூலம் பிரபலம் ஆனவர். அதேபோல், பா. ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரையில் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்து பிரபலம் ஆனார். ஆனால், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, 48 வயதில் கோரானா பாதிப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மகள் நிவ்யா மாறன், தற்போது பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, அப்பாவின் இறப்பை அசிங்கப்படுத்திவிட்டார்கள் என கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை போல நேரடியாக வீட்டிற்குள் போட்டியாளர்களை அனுப்பும் நிகழ்ச்சி அல்ல. தமிழ்நாடு முழுவதும் இருந்து பொதுமக்களை தேர்வு செய்து அவர்களின் தனித்துவம், திறமை, மனநிலை உள்ளிட்ட பலவற்றை பல கட்டங்களாக சோதித்து இறுதியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 3 போட்டியாளர்களை அனுப்புவதற்காக உருவான சிறப்பு நிகழ்ச்சி தான், ‘பிக் பாஸ் காமன்மேன்’ என கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் போட்டியாளர்களான ஆரி , ராஜு ஜெயமோகன், ஓவியா ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். மாயா தொகுத்து வழங்குகிறார். ஆடிஷனில் போட்டியாளர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு அவர்களுடைய பதில் மற்றும் மனநிலை எப்படி இருக்கிறது? என “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி” என ரொம்பவே சோதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஆடிஷனில் தான் நடிகர் மாறனின் மகளான நிவ்யா மாறனும் கலந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து, நிவ்யா மாறன் யூட்யூப்களுக்கு பேட்டியளித்தபோது, “சத்தியமாக அந்த பிக்பாஸ் காமன் மேன் ஷோவில் நடந்தது சுத்தமாக எனக்கு பிடிக்கவில்லை. ரொம்ப மோசமா இருந்தது. மிகப்பெரிய வருத்தம். நான் பிறந்து வளர்ந்ததிலிருந்து நான் பண்ணின மோசமான விஷயம் காமன் மேன் ஷோ அட்டெண்ட் பண்ணினதுதான். சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொண்டேன்” என்றவர், தனது அப்பாவின் இறப்பில்கூட அழவில்லை. அவ்வளவு போல்டான தன்னை... ட்ரிகர் செய்து , அழவைத்து அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார்கள் என கூறியுள்ளார். மேலும் கூறும்போது, அக்ரிமெண்ட் பேப்பரை கொடுத்து டாஸ்க் ஸ்டார்ட் ஆகப்போகுது...சீக்கிரம் சீக்கிரம் சைன் பண்ணுங்க என அவசரப்படுத்தி சைன் வாங்கிக்கொண்டார்கள். யாருமே படிக்காமல்தான் சைன் போட்டார்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். குறைந்த சேர்களை வைத்து யார் முதலில் உட்காருகிறார்களோ அவர்தான் வின்னர் என்பதுபோல் கூறிவிட்டார்கள். எலிமினேட் ஆகிவிடுவோமோ என்ற பயத்தில் பலரும் அடித்துக்கொண்டார்கள். கடைசியில் அதில் தோற்றுப்போனவர்கள் எலிமினேட் செய்யப்படவில்லை. பிறகு ஏன் அப்படி செய்தார்கள்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தனது தந்தையின் பெயரை வைத்துக்கொண்டது குறித்தும் தேவையில்லாமல் கேள்வி எழுப்பினார்கள் என குற்றம் சாட்டிய நிவ்யா மாறன், “நீங்க ஏன் உங்க பேருக்கு பின்னாடி மாறன்னு போட்டிருக்கீங்கன்னு மீண்டும் மீண்டும் கேட்டாங்க. அதை நீங்க போட்டிருக்கவேண்டிய அவசியம் இல்லயே என நடிகர் ஆரி கேட்டார். நீங்கள் தேவையிலாமல் அப்பாவின் பெயரை பயன்படுத்துவதுபோல் இருப்பதாக தோன்றுகிறது என்றார்கள். அப்படியென்றால், இந்த ஷோவின் ஜட்ஜாகவும் தொகுப்பாளராகவும் உள்ள மாயா ஏன், மாயா கிருஷ்ணன் என வைத்துக்கொண்டார் என கேட்டேன். என்னைப்பற்றி ஒரு கேள்வியும் கேட்கவில்லை. என் அப்பாவைப்பற்றிதான் கேட்டார்கள். நான் பாடல்கள் எழுதுவேன், டான்ஸ் பண்ணுவேன், நன்றாக நடிப்பேன் என சொன்னேன். எதையும் காதில் வாங்கவில்லை. அப்பா அப்பா என பேசி சீன் போடுது என ரெட் கார்டு காண்பித்துவிட்டார்கள் என வேதனையோடு கூறியுள்ளார். அப்பா இறக்கும்போது பத்து லட்ச ரூபாய் கடன். ஆனால், தன்னை நெப்போ கிட் என கூறிவிட்டார்கள் என வருத்தப்பட்ட நிவ்யா மாறன், எதையாவது ஒன்றை பிடித்து மேலே வந்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், இந்த ஷோ மூலம் பல மடங்கு கீழே தள்ளப்பட்டுவிட்டேன் எனவும் குமுறி வெடித்துள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் நடந்தது. 2 வாரங்கள் ஷோவில் மட்டுமே செலவிட்டேன். ஆடைகள், போக்குவரத்து என 40, 000 ரூபாய் பணம் செலவானதுதான் மிச்சம். ஒரு பேட்சுக்கு சுமார் 300 என மொத்தம் 3 பேட்ச். 600 பேர் இருந்திருக்கலாம். அதில், டாப்- 50 ஃபைனல் செய்து, ஷோவுக்கு 25 பேர் எடுத்திருந்தார்கள். அதில் 3 பேர் உள்ளே அனுப்புகிறார்கள்.நான், முதலில் அம்மா எனது வெற்றிக்காக காத்துக்கொண்டிருப்பார் என்றுதான் சொன்னேன். அவர்கள்தான், அப்பா வைத்து சொல்லுங்கள் என்றார்கள். அவர்கள்தான் எனது அப்பாவை கண்டெண்ட் ஆக்கினார்கள் எனவும் குற்றம் சாட்டியவவர் நடிகர் ஆரியை வயிற்று பிழைப்புக்கு அவர் இப்படி செய்கிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். அப்பா எப்படி இறந்தார்? என நடிகர் ஆரி கேட்டார். அம்மா - அப்பா ரெண்டு பேருக்குமே கோவிட். எனக்கு 14 வயது என்றேன். அப்பாவின் இறப்பை எப்படி எதிர் கொண்டீங்க? என கேட்டார்கள். ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்பா செல்லம் கொடுத்து வளர்த்தார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது, அப்பா இறந்துட்டார்ன்னு தகவல் வருது. என்ன செய்றதுன்னே தெரியல. எஞ்சியிருக்கிற அம்மாவை காப்பாற்றணும் என்பது மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. பத்து லட்சம் கடன். ஒரே பெண். எட்டாவது படிக்கும் என் மீது விழுந்தது. பொருளாதார நெருக்கடி எல்லாவற்றையும் சமாளித்து பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தேன் என்றெல்லாம் உருக்கமாக அப்பாவின் இறப்பு குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது, ஓவியாவும் மாயாவும் திடீரென வாய்விட்டு சிரித்துவிட்டார்கள். எனக்கு அசிங்கமாகிவிட்டது. கோவம் வந்துவிட்டது. அப்பாவை அசிங்கப்படுத்திட்டோமே என தோன்றியது. அப்பா 20 வருடம் சினிமாவில் கஷ்டப்பட்டு உழைச்சிருக்கார். அவரைப் பற்றி சிரிக்க இவர்களுக்கு தகுதி இல்லை. மாயா ஹோஸ்ட் என கூப்பிட்டு ஜட்ஜ் ஆக்கிவிட்டார்கள். ஆனால், இதைவிட இன்னொரு மோசமான சம்பவமும் உள்ளே நடந்தது. நான் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென ஆரி தன் பக்கத்தில் இருந்த ஒரு பந்தை எடுத்து என்னுடைய முகத்துக்கு நேராக வீசிவிட்டார். ஒரு நொடி தாமதித்தாலும் அந்த பந்து முகத்தில் அடித்து இருக்கும். உடனே நான் அதை டக்கென்று பிடித்து விட்டேன். அப்போது அவர் இது நான் வேணும்னு தான் உங்க மேல வீசினேன் , நீங்க பேசிக்கொண்டு இருந்தாலும் உங்களுடைய கவனம் எப்படி இருக்கிறது என்று சோதித்தேன் என சொல்கிறார். எண்டாஃப் ஜார்னி என்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. எண்டாஃப் ஷோதான் என்றெல்லாம் நிவ்யா மாறன் கடுமையாக விமர்சித்துள்ளது, சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது. ஆனால், பிக்பாஸ் காமன் மேன் ஷோ டீமோ, கதறுங்க கதறுங்க... நீங்க கதறினாதானே? எங்களுக்கு புரமோஷன் என்கிற ரேஞ்சுக்கு செயல்படுவார்கள் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Polimer News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பிக்பாஸ் காமன்மேன் ஒரு fake.. “அப்பாவின் இறப்பைக் கேட்டுவிட்டு வாய்விட்டு சிரிச்சாங்க ஓவியா, மாயா” அடுத்தடுத்து வெளியாகும் சர்ச்சை!
PulseNews சுருக்கம்

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் வரும் சாமானியர்களுக்கான 'பிக் பாஸ் தி காமன் மேன்' நிகழ்ச்சியில் நடந்தவை குறித்து, வெளியேறிய போட்டியாளர்கள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, நடிகர் மாறனின் மகள் நிவ்யா மாறன், நடிகர் ஆரி மற்றும் இந்த நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த விமர்சனங்கள் இணையத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன. நிகழ்ச்சியில் நடந்த சம்பவங்கள் குறித்து போட்டியாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பி வருகின்றன.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics