ஜல்லிக்கட்டை தடை செய்ய TVK அரசு திட்டமா.? இதுக்காக தான் சட்டமன்றத்தில் First Look-ஆ- கேள்வி கேட்கும் அதிமுக

ஜலிக்கட்டு போட்டி - தவெக எம்எல்ஏ பேச்சு

தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தவெக எம்எல்ஏ கருப்பையா ஜல்லிக்கட்டு போட்டியை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில்,அதிமுக வெளியிட்டுள்ள பதிவில், தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.

புரிதல் இல்லாமலா எம்எல்ஏ பேசினார்.?

சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த “ஏறு தழுவுதல்” பற்றி புரிதல் இல்லாமலா அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார்? மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு நடத்திய வரலாற்றுப் புரட்சியின் விளைவாக, அன்றைய அஇஅதிமுக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்ற ஒரு உரிமையை, மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ள சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு ஏன் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை?

ஜல்லிக்கட்டு போட்டி தடை செய்ய திட்டமா.?

ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான First Look-ஆக தனது MLA-வை பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர்? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது. தனது MLA பேசிய பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்! ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்! என அந்த பதிவில் அதிமுக குறிப்பிட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, தவெக எம்எல்ஏ கருப்பையா ஜல்லிக்கட்டு போட்டியை விமர்சித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து அவர் அவையில் இழிவாக பேசியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தை முன்வைத்து, ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய தவெக அரசு திட்டமிடுகிறதா என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக சட்டமன்றத்தில் முதல் கேள்வியாக அதிமுக தரப்பில் விவாதிக்கப்பட உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.