சேலம் ஸ்ரீ ராஜகணபதி ஆலயத்தில் நாளை கும்பாபிஷேக விழா :ஏற்பாடுகள் தீவிரம்
சேலம் டவுன் பகுதியில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி ஆலயத்த13 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையாளர் ஜோசி நிர்மல் குமார் நேரில் ஆய்வு செய்தார். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டுஇன்றும் நாளையும் ஆலயம் அருகேஉள்ள சாலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யவும் சாலையோரை கடைகளை அனுமதிக்க வேண்டாம் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சேலம் டவுன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகணபதி ஆலயத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மாநகர காவல் ஆணையாளர் ஜோசி நிர்மல் குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
விழாவை முன்னிட்டு இன்று மற்றும் நாளை கோயில் அருகிலுள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சாலையோரக் கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.