நட்சத்திரங்களும் நன்மைகளும் மகம் -ஜோதிட ரத்னா ஸ்ரீ பூங்கோடி
ம க நட்சத்திரத்தில் பிறந்த கிரகங்களில் முக்கியமானவர் உண்டு! அவர். சுக்கிர பகவான். நவ கிரகங்களில் இருக்கும் குரு பகவானும் சுக்கிர பகவானும் ஒரேபோல அனைத்துக் கலைகளை யும் கற்றவர்கள், குருபகவான் தேவர்களுக்கு குருவாகவும், சுக்கிரன் அசுர குலத்திற்கும் குருவாகவும் இருப்பவர்கள். ஆனால் குருபக வானுக்கு தெரியாத வித்தை சுக்கிரனுக்குத் தெரியும்! அதுதான் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் சஞ்ஜீவி ரகசியம். (இதன் காரணமாகவே பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் தேவர்களுக்கு ஏற்பட்டது) இதனால் தான் இந்த மக நட்சத்திரக்காரர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் விரைந்து உடல்நலம் தேறிவிடுவார்கள். ஆனால் அதேசமயம் "ஓவர் கான்பிடண்ட் உடம்பிற்கு ஆகாது' என்பதையும் மக நட்சத்திரக்காரர்கள் உணர வேண்டும். அதிதேவதை: பித்ருக்கள் (முன்னோர்கள்) ஆவர். அதிபதி: கேது பகவான் ராசி: சிம்ம ராசி தெய்வம்: சிவன் மற்றும் விநாயகர் விருட்சம்: ஆலமரம் விலங்கு: ஆண் எலி பறவை: ஆண் கழுகு சின்னம்: அரச சிம்மாசனம் (அ) அரச பல்லக்கு ஆகும். பெருமை மற்றும் அரசத்தன்மையை குறிக்கக்கூடியது. இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பத்தாவது இடத்தை பெறுவது மக நட்சத்திரமாகும். இதன் அதிபதி கேதுபகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாகக் கருதப்படுகிறது. மக சிம்ம ராசிக்குரிய நட்சத்திரமாகும். இது உடலில் இதயம், முதுகு, இடுப்பின் மேல்பகுதி போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திர த்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ம, மி, மு, மெ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் மா, மீ, மு ஆகியவைகளாகும். குண அமைப்பு மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்று பழைய நூல்களில் குறிப்பிட்டிருந்தாலும் எல்லாருக்கும் அந்த யோகம் அமைவதில்லை. எதிலும் தனித்தன்மை கொண்டவர்களாகவும், சுதந்திரத்தை விரும் புபவர்களாகவும் இருப்பார்கள். தங்கள் விஷயங்களில் மற்றவர்கள் தலையிட்டு செய்வதை விரும்ப மாட்டார்கள். வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை மிக்கவர்கள். எப்பொழுதும் உண்மையே பேசுபவர்கள். கோபமிருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும் என்ப தற்கேற்ப நியாமான கோபமும், குணமும் இருக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டேயிருப்பார்கள். தனக்கு கீழ் படிந்தவர்களை எந்த துன்பத்திலிருந்தும் காக்கும் இவர்கள் எதிரிகளை ஓட ஓட விரட்டியடிக்காமல் ஓயமாட்டார்கள். மனதில் ஒன்று, வெளியில் ஒன்று வைத்து பேச தெரியாதவர்கள். அனுபவ அறிவு அதிகமிருக்கும். நேரம் காலம் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். குடும்பம் எதையும் முன்கூட்டியே அறியும் திறமை கொண்டவர்கள் என்பதால் குடும்ப வாழ்வில் அனுசரித்து செல்வார்கள். காதலித்து திருமணம் செய்துகொள்வதையே விரும்புவார்கள். இளமையிலேயே சுக்கிர திசை வருவதால் திருமண வாழ்க்கை விரைவில் அமையும். சிற்றின்ப வேட்கை அதிகமுடையவர்கள். இவர்களுக்கு ஆண் குழந்தை பாக்கியமே அதிகம். வாழ்க்கையில் செல்வம் செல்வாக்கு அதிகமிருந்தாலும் எப்பொழுதும் எதையாவது மனதில் போட்டு குழப்பி கொண்டேயிருப்பார்கள். தவறு என மனதிற்கு பட்டால் பிறரிடம் மன்னிப்பு கேட்க தயங்கமாட்டார்கள். உற்றார்- உறவினர்களிடம்கூட வலிய சண்டைக்கு போகமாட்டார்கள். வந்த சண்டையையும் விடமாட்டார்கள். இவர்களிடம் உதவிபெற்று வாழ்பவர்கள்கூட முன்னால் முகஸ்துதி பாடிவிட்டு பின்னால் தூற்றிக் கொண்டிருப்பார்கள். மனைவி, பிள்ளைகள்மேல் அதிக பாசமிருக்கும். தொழில் மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எவ்வளவு கஷ்டமான பணியை எடுத்துக் கொண்டாலும் அதை பாடுபட்டு செய்துமுடித்து பெரும் பணம் சம்பாதிக்க ஆசைபடுவார்கள். பரந்த மனப்பான்மையும், நல்ல நிர்வாகம் திறனும் உடையவர் கள். பிறரிடம் கைகட்டி அடிமையாக வேலை செய்ய விரும்பமாட்டார்கள். எந்த பணியிலும் தானே முதன்மையாக இருக்க வேண்டும் என நினைப் பார்கள். இவர்கள் மருந்து, மாந்திரீகம், ஜோதிடம், சரித்திரம், தர்க்க சாஸ்திரம், புரண, இதிகாசம் ஆகியவற்றில் புகழ்பெற்று விளங்குவார்கள். பழம்பெரும் கலை, கலைகளை ஆராய்ச்சி செய்வதை விரும்புவார்கள். உளவியல் நிபுணர்களாகவும் இருப்பார்கள் பலர் பேராசிரியர், நடிகர், நடிகை, ஆடை வடிவமைப்பு, விளம்பர மாடல் போன்ற துறைகளிலும் ஈடுபடுவார்கள். வண்டி வாகனங்கள்மீது அதிக விருப்பமும் உண்டு. 26 வயதி லிருந்து 33 வயதுக்குள் சொந்த வீடு யோகமும் 46 வயதிலிருந்து 52 வயதுக்குள் பெயர், புகழும் உயரும். நோய்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடலின் பின்புறம் வலி ஏற்படும். சிறு நீரக பிரச்சினையும் இதய சம்மந்தப்பட்ட பிரச்சினையும் தண்டு வட ஜவ்வு காய்ச்சலும் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். திசை பலன்கள் மக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக கேது திசை வரும். இதன் மொத்த வருட காலங்கள் ஏழு ஆகும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா காலங்களை அறியலாம். இத்திசை காலங்களில் உடல் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள், கல்வியில் மந்தநிலை, தாய்க்கு ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் குடும் பத்தில் சற்று குழப்பங்கள் உண்டாகும். இரண்டாவது திசையாக வரும் சுக்கிர திசை மொத்தம் இருபது வருடங்கள் நடைபெறும் இளம் வயதிலேயே சுக்கிர திசை வருவதால் திருமண வாழ்க்கையும் இளம் வயதிலேயே நடைபெறும். சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் இல்வாழ்க்கை போராட்டகரமானதாக இருக்கும். மூன்றாவதாக வரும் சூரிய திசை காலங்களில் சூரியன் பலமாக இருந்தால் தந்தைவழியில் அனுகூலங்களை பெறமுடியும். சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் தந்தைக்கு கெடுபலன்களும் உண்டாகும். நான்காவதாக வரும் சந்திர திசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும் இக்காலங்களில் ஏற்ற- இறக்கமான பலன்களை பெறமுடியும் தேவையற்ற மனக்குழப்பங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நிம்மதி குறையும். ஐந்தாவதாக வரும் செவ்வாய் திசையின் மொத்த காலங்கள் ஏழு வருடங்களாகும். மக நட்சத்திரம் கேதுவின் சாரம் என்பதால் செவ்வாய் திசை மாரக திசையாகும். இதனால் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் செவ்வாய் பலம் பெற்றிருந்தால் செல்வம் செல்வாக்கு உயரும். பூர்விக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். மக நட்சத்திரகாரர்களின் ஸ்தல விருட்சம் ஆலமர மாகும். இந்த மரத்தினை வழிபாடு செய்வதனால் நற்பலனை அடைய முடியும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதம் இரவு பன்னிரண்டு மணியளவில் உச்சி வானத்தில் காணமுடியும். செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் மக நட்சத்திரத்தில் திருமணம், தாலிக்கு பொன் உருக்குவது, வாகனம் வாங்குவது, வேத விரதங்களை பூர்த்தி செய்வது, வாஸ்துபடி வீடு கட்ட ஆரம்பிப்பது, ஆயுதம் பயிலுவது, களஞ்சியத்தில் தானியம் சேமிப்பது போன்றவற்றை தொடங்கலாம். மக நட்சத்திரத்திற்குரிய சிறப்புமிக்க சித்தராக சிவவாக்கிய சித்தர் கருதப்படுகிறார் வழிபாட்டு ஸ்தலங்கள் மக நட்சத்திரத்திற்குரிய பரிகாரத் கோவிலாக திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி தவசிமேடை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் விளங்குகிறது. பரத்வாஜ மகரிஷி மக நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால் இத்தலம் மக நட்சத்திரத்திற்கு உரிய சிறப்புப் பெற்ற கோவிலாகப் போற்றப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு (சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவு). வடாரண்யேஸ்வரர் (வண்டார்குழலி அம்மன்). நடன சபை: ஆலயம் திருக்கச்சூர் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட் டிலிருந்து வடக்கே 12 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தாததில் திருமால் ஆமை வடிவில் ஈசனை வழிபட்டதால் கச்சபேஸ்வரர் (அஞ்சனாட்சியம்மை) என பெயர் கொண்டது. கூர்ம தீர்த்தமானது புனித மானது. கிழப்பழுவூர் அரியலூரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி-அரியலூர் சாலையில் அமைந்துள்ளது. ஆலந்துறை நாதராக ஈஸ்வரனும், அருந்தவ நாயகியும் அருள்புரியும் ஸ்தலம். இக்கோவில்களில் வழிபாடு செய்யலாம். கூற வேண்டிய மந்திரம் "ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாஸஹஸ்தாய தீமஹி தன்னோ ஸீர்ய ப்ரசோதயாத்''. மக நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள் அஸ்வினி, ஆயில்யம், கேட்டை, மூலம், ரேவதி ஆகிய ஆண் பெண் நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்யக்கூடாது. பெண் மக நட்சத்திரத்திற்கு பூசம், அஸ்தம் மற்றும் சதயம் போன்ற ஆண் நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாகப் பொருந்துகின்றன. ஜோதிட விதிகளின்படி தினப்பொருத்தம் மற்றும் இதர நட்சத்திர பொருத்தங்கள் இவற்றுக்கு நன்றாக அமையும். ஆண் மக நட்சத்திரத்திற்கு சித்திரை மற்றும் அவிட்டம் (3, 4 பாதங்கள்) போன்ற பெண் நட்சத்திரங்கள் மிகச் சிறப்பாகப் பொருந்துகின்றன. ஜோதிட முறையில் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது ராகு- கேது மற்றும் நாடி பொருத்தம் போன்றவையும் கணக்கில் கொள்ளப்படும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் மிக முக்கியமானவர் சுக்கிர பகவான் ஆவார். நவக்கிரகங்களில் குரு பகவானும் சுக்கிர பகவானும் அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் இருவரும் முறையே தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் குருவாகத் திகழ்கின்றனர்.
இருப்பினும், குரு பகவானுக்குத் தெரியாத ஒரு ரகசிய வித்தை சுக்கிர பகவானுக்குத் தெரிந்திருந்தது. இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் அந்த சஞ்சீவி வித்தையே, பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தேவர்களைத் தள்ளியது.