PulseNews
லைஃப் ஸ்டைல்

வாஸ்து வாசகர் கேள்வி பதில்கள்! Ln.M. ஜெகநாதன் M.A.,B.Sc.,B.Ed.,

ந. ராமசாமி, வேப்பூர். நான் வாங்கி இருக்கும் மனை முக்கோண வடிவில் உள்ளது. இதில் வீடு கட்டி குடியிருக்கலாமா? இது என் பூர்வீக மனை. வீடு கட்ட முக்கோண மனை உகந்தது அல்ல. பொதுவாக வீடு கட்ட மனை சதுரமாக இருப்பது நல்லது. ஆனால், தற்போது அதுபோன்ற மனைவி கிடைப்பதில்லை. மனைகள் செவ்வக வடிவில் இருப்பது நல்லது. கிழக்கு, மேற்கு, நிலம், வடக்கு, தெற்கு நீளத்தைவிட அதிகமாக இருந்தால் மிகவும் நல்லது. எனவே முக்கோண வடிவிலுள்ள இடத்தில் வீடு கட்ட கூடாது. செவ்வக வடிவிலோ, சதுர வடிவிலோ மனை இருந்தால், அதில் வீடு கட்டினால் வாழ்வாங்கு வாழலாம். ந.சுரேஷ், கள்ளக்குறிச்சி. ஒரு மனை விலைக்கு வருகிறது. தென்மேற்கு திசையில் போர்போட்டு உள்ள மனை ஆகும். இந்த மனையை வாங்கி அதில் கட்டடம் கட்டலாமா, என் நண்பர்கள் என்னை குழப்புகிறார்கள்; தெளிவுபடுத்துங்கள். வாஸ்துபடி போர் கிணறு தரைமட்ட நிலத்தடி தொட்டி போன்றவை வடகிழக்கு மூலையில் அமைவதுதான் சிறப்பு. அதுதான். வாஸ்து உடைய விதி. தாங்கள் பார்த்திருக்கும் மனையில் தென்மேற்கு மூலையில் போர்போட்டுள்ளது தவறு. அந்த மனை வீடு கட்ட உகந்ததல்ல. எனவே அந்தப் போரை மூடிவிட்டு வடகிழக்கு மூலையில் தனியாக போர்போட்டு, வீடுகட்ட வேண்டும் என்றால் கட்டலாம். நீலகண்டன், கடலூர். நான் வாங்கியுள்ள மனை, வடக்கு பக்கமும் வடகிழக்கு பக்கமும் உயர்ந்துள்ளது. இந்த மனை வீடு கட்டலாமா? தாங்கள் வாங்கியுள்ள மனைக்கு பிரம்மஹத்தி தோஷம் உள்ள மனை என்று பெயர். இதில் வீடு கட்டினால் வீட்டில் உள்ளவர்களுக்கு மனநிலை பாதிக்கும். உடல்நிலை பாதிக்கும் எனவே கட்டக்கூடாது. ரெங்கராஜ், புகலூர். நான் புதிதாக வீடுகட்டி இருக்கிறேன். எனக்கு மனைவி இல்லை. காலமாகிவிட்டார். பத்து வயதில் ஒரு குழந்தையும் எட்டு வயதில் ஒரு குழந்தையும் உள்ளார். கிரகப் பிரவேசத்தின்போது, நான் மட்டும் அமர்ந்து பூஜையை செய்யலாமா? பூஜையை உங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து மகிரஹ பிரவேசத்தை மகிழ்ச்சியுடன் செய்து குடியிருங்கள். உங்கள் வீட்டிற்கு உங்கள் மனைவியின் பெயரை வையுங்கள்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வாஸ்து வாசகர் கேள்வி பதில்கள்! Ln.M. ஜெகநாதன் M.A.,B.Sc.,B.Ed.,
PulseNews சுருக்கம்

வேப்பூர் பகுதியைச் சேர்ந்த ந. ராமசாமி என்பவர், தனது பூர்வீக இடமான முக்கோண வடிவிலான மனையில் வீடு கட்டி குடியிருக்கலாமா என்று வாஸ்து நிபுணர் ஜெகநாதனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள நிபுணர், முக்கோண வடிவிலான மனையில் வீடு கட்டுவது வாஸ்துப்படி உகந்தது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

பொதுவாக வீடு கட்ட சதுரம் அல்லது செவ்வக வடிவிலான மனைகளே சிறந்தவை. குறிப்பாக, கிழக்கு-மேற்கு நிலத்தின் நீளம் வடக்கு-தெற்கு நீளத்தை விட அதிகமாக இருப்பது மிகவும் நன்மையை அளிக்கும் என்பதால், முக்கோண வடிவ மனையைத் தவிர்த்து சதுர அல்லது செவ்வக வடிவ மனைகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle