PulseNews
லைஃப் ஸ்டைல்

கேரள ஜோதிட இரகசியங்கள்! (பாகம்-2) -லால்குடி கோபாலகிருஷ்ணன்(15)

கா ணும் வரை கனவே நிஜமாக தெரிகிறது. வாழ்க்கை முடிந்த பின், வாழ்க்கையே கனவாகிறது. வாழ்கை என்பதே விதியின் விடுகதை தான். இந்த உலகம், இரகசியம் நிறைந்ததாயும், புரிந்துக் கொள்ள முடியாததாகவும் இருக்கிறது. வருவதை மறுக்க முடியாது. போவதை நிறுத்தமுடியாது. பிரசன்னம் பார்க்க வந்த இளைஞரின், கவலையும், பதட்டமும், அவர் சொல்ல வந்த பிரச்சனையின் தீவிரத்தைக் காட்டி யது. தன் மனைவிக்கு, மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டதாகவும், மருத்துவ சிகிச்சையால் பலன் கிடைக்க வில்லை என்ற வருத்தத்தைப் பகிர்ந்துக்கொண்டார். தனக்கு நீண்ட ஆயுளையுடைய புத்திர பாக்கியமுண்டா? என்பதையறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந்திருந்தார். ஸ்ரீ காடம்புழா பகவதியை தொழுது,பிரசன்னத்தைத் துவக்கினார், கிருஷ்ணன் நம்பூதிரி அபுத்திர ராசியில், சோழி லக்னம் அமைந்தது. புத்திர பாவாதிபதியும், பாக்கிய ஸ்தானதிபதியும், சனி, ராகுவுக்கிடையே அமர்ந்து, பாப கர்த்தாரி யோகம் பெற்றிருந்தார்கள். புத்திர காரகர் குரு, வக்கிரம் பெற்று அசுப சேர்க்கையும் பெற்றது. ஐந்தாம் பாவத்தில் செவ்வாய் மட்டும் தனியாக நின்றதால், பிரச்சினையின் தீவிரம் புரிந்தது. முன்ஜென்ம வினைப்பயனின் வலிமை, விஸ்வரூபம் எடுத்தது. ஈசனின் அருளால் மட்டுமே, இந்த சோதனையை வெற்றி கொள்ள முடியுமென்ற முடிவுக்கு வந்தார், கிருஷ்ணன் நம்பூதிரி.ஆரணியில் அருள் பாலிக்கும், புத்திர காமேட்டீஸ்வரர் திருக்கோவிலில்,ஆனி மாதம் பௌர்ணமியன்று நடைபெறும், புத்திர காமேஷ்டி யாகத்தில் கலந்து கொண்டால் நற்பலன்கள் கிடைக்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரத்தால் பலன் கிடைத்தது. மனக் கவலை தீர்ந்தது. மழலை தவழ்ந்தது. கேரள ஜோதிடத்தின் சிறப்பு ஆணும், பெண்ணும் சமம் என்றாலும் ஜாதக ஆய்வில் அணுகு முறையை வேறுபடுத்திக் காண்பதே கேரள ஜோதிடத் தின் சிறப்பு. ஸ்திரி ஜாதகத்தில் சில விசேஷ விதிகளுண்டு. வைத்திய நாடியில் ஆண்களுக்கு வலதுகையிலும் பெண்களுக்கு இடது கையிலும் நாடி பார்ப்பதுபோல் ஆண் ஜாதகங்களில் மேஷத்தை, காலபுருஷனின் தலையாகக் கொண்டு லக்னம் அமையும். ராசியின் குண, தோஷங்களையறிவது போல், பெண் ஜாதகங்களில் துலாத்தை முதலாகக் கொண்டும் லக்ன பலனைக் காணவேண்டும். ஆண் கூறு வலப்பக்கமும், பெண் கூறு இடப்பக்கமும், அமைவதே அ ர்த்த நாரீஸ்வரர். சரராசியாக மேஷமும், துலாமும் அமைந்தாலும். மேஷம் நெருப்பையும் துலாம் காற்றையும் குறிப்பதையும் அவை ஆண், பெண்ணின் குணாதிசியத்தோடு ஒருங்கிணைவதையும் ஒப்பிட்டு நோக்குதல் வேண்டும். ஆணுக்கு, சுக்கிரனும் பெண்ணுக்கு செவ்வாயும் களத்திரகாரகர்கள். முக்கியமாக பெண்களின்ஜாதகத்தில். லக்ன திரேகாணத்தைக்கொண்டே அந்த ஜாதகியின் குணநலனையறிய முடியும்.பெண் ஜாதகத்தில் குருவும், சந்திரனும் அமையும், திரேகாணத்தைக்கொண்டே அந்த ஜாதகியின் கற்பு மற்றும் ஒழுக்கத்தையறியலாம். பெண் ஜாதகத்தின் இரண்டாம் பாவத்தால் பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்ற நான்கு பிரிவினரின் உடலமைப்பையும், ஜென்ம நட்சத்திரத்தைக் கொண்டு, தெய்வதத்துவம், மனிதத்துவம், நாகதத்துவம் முதலான எட்டு தத்துவங்களின் அடிப்படையில் இயல் பினால் வரும் தத்துவப் பலனையறியலாம் என்பதே கேரள ஜோதிடர் களின் கருத்து. கண் நோய் நீங்குமா? கேள்வி: ஐந்து வருடங்களாக கண் நோயால் அவதிப்படுகிறேன். பார்வையை இழந்துவிட்டேன். இதுவரை எடுத்துக்கொண்ட மருத்துவ சிகிச்சையும் பலனளிக்கவில்லை. என் கண் பார்வையை மீண்டும் பெறுவதற்கு பரிகாரம் உண்டா? எண்: 19, மிருகசிரீடம்: 2, ராசியாதிபதி: புதன், நட்சத்திராதிபதி: செவ்வாய். சோழி லக்னத்திற்கு இரண்டாமிடத்தில் பிரசன்ன கால லக்னம் அமைந்து, கண் நோய் தொடர்பான பிரச்சினையைக் காட்டுகிறது. சோழி லனத்தின் அதிபதியும், இரண்டாமிடாமதிபதியும், பன்னிரண்டாமிடத்தில் அமர்வது, கண் நோயின் தீவிரத்தை உறுதி செய்கிறது. பன்னிரண்டாமிடத்தில் கண்ணுக்கு காரகர்களாகிய சூரியனும், சந்திரனும் கூடியிருப்பது கண் பார்வை இழப்பைக் குறிக்கிறது. இரண்டாமிடமாகிய கடகத்திற்கு பாதக ஸ்தானமாகிய ரிஷபத்தில் சூரிய சந்திரர் இருப்பதால் சிகிச்சை பலனளிக்கவில்லை. நேத்திர ஸ்தானங்களாகிய, இரண்டாமிடமும், பனிரெண்டாமிடமும் பாதிக்கப்பட்டுள்ளதால், பரிகாரத்தால் மட்டுமே பலன் கிடைக்கும். பரிகாரம் சமயபுரம் சென்று, மாரியம்மனுக்கு "கண் மலர்' நேர்த்திக் கடன் செய்தால் கண்ணில் வந்த பாதிப்பு நீங்கும். செல்: 63819 58636

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கேரள ஜோதிட இரகசியங்கள்! (பாகம்-2) -லால்குடி கோபாலகிருஷ்ணன்(15)
PulseNews சுருக்கம்

வாழ்க்கையை ஒரு விதியின் விடுகதையாகக் குறிப்பிடும் லால்குடி கோபாலகிருஷ்ணனின் இந்தத் தொடரில், உலகின் மர்மமான தன்மையும் விதியை மாற்ற முடியாது என்பதும் விளக்கப்பட்டுள்ளன. நடப்பவை எதையும் நம்மால் தடுக்க முடியாது என்ற யதார்த்தத்தை இது எடுத்துரைக்கிறது.

ஜோதிடம் பார்க்க வந்த இளைஞர் ஒருவர் மிகுந்த கவலையுடனும் பதட்டத்துடனும் தனது குறையை வெளிப்படுத்தினார். தனது மனைவிக்கு மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகவும், பல மருத்துவ சிகிச்சைகள் செய்தும் பலன் கிடைக்கவில்லை என்றும் அவர் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle