PulseNews
லைஃப் ஸ்டைல்

மகாத்மா காந்தியின் கடிதங்கள்; ஏலத்தில் உலக சாதனை

இந்திய வரலாற்று ஆவண விற்பனையில் மகாத்மா காந்தியின் கைப்பட எழுதப்பட்ட கடிதங்கள் உள்ளிட்ட பொருட்கள் ரூ.16.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது உலக சாதனையாகப் பார்க்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பரும், விடுதலை போராட்ட வீரருமான ஆனந்த் டி. ஹிங்கோரானிக்கு காந்தி ஏராளமான கடிதங்கள் எழுதியுள்ளார். குறிப்பாக ஆனந்தின் மனைவி உயிர் இழந்ததற்குப் பிறகு, சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கடிதப்பறிமாற்றம் தொடர்ந்து வந்துள்ளது. இந்த கடிதங்கள் அவருக்கு ஆறுதல் மற்றும் ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்ததாகக் கூறப்படுகிறது. காந்தியின் இந்த கடிதங்களில் சத்தியம், அகிம்சை மற்றும் சேவை ஆகியவை குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ’இன்றைய சிந்தனை’ என்ற தலைப்பில், மகாத்மா காந்தியின் கையெழுத்துப் பிரதிகளில் இடம்பெற்ற 688 சிந்தனைகள் அடங்கிய அரிய தொகுப்பு , சேஃப்ரானார்ட் நிறுவனம் சார்பில் ஏலத்தில் ரூ.16.20 கோடிக்கு விற்கப்பட்டு உலக சாதனை படைத்தது. இந்த ஏலத்தில், மகாத்மா காந்தியின் கடிதங்கள், புகைப்படங்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் அடங்கிய 86 தொகுப்புகளும் ஏலத்தில் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த் டி. ஹிங்கோரானி 1930-ல் முதன்முதலில் காந்தியைச் சந்தித்தார். பின்னர் சபர்மதி ஆசிரமத்தில் அவருடன் நெருக்கமாகப் பணியாற்றினார். இவர் தண்டி யாத்திரை, சட்ட மறுப்பு இயக்கம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் பங்கேற்றார். பிற்காலத்தில், காந்தியின் எழுத்துக்களைப் பாதுகாப்பவராகவும் முக்கியமான பதிப்பாளராகவும் இவர் திகழ்ந்தார். இவரது குடும்பத்தினர் இந்த ஆவணத் தொகுப்பைத் தலைமுறைகளாகப் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில், இந்த பொருட்கள் ஏலத்தில் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மகாத்மா காந்தியின் கடிதங்கள்; ஏலத்தில் உலக சாதனை
PulseNews சுருக்கம்

மகாத்மா காந்தி தனது நெருங்கிய நண்பரும் விடுதலைப் போராட்ட வீரருமான ஆனந்த் டி. ஹிங்கோரானிக்கு எழுதிய கடிதங்கள் உள்ளிட்ட பொருட்கள், இந்திய வரலாற்று ஆவணங்கள் விற்பனையில் ரூ.16.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஏலத்தொகை ஒரு உலக சாதனையாகக் கருதப்படுகிறது.

ஆனந்தின் மனைவி மறைவுக்குப் பிறகு, அவருக்கு ஆறுதல் மற்றும் ஊக்கம் அளிக்கும் நோக்கில் காந்தி சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கடிதங்களை எழுதியுள்ளார். தற்போது இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதங்கள் ஏலத்தில் சாதனை படைத்துள்ளன.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle