காதலியின் 3400 லிப்ஸ்டிக் முத்தங்களால் காரை அலங்கரித்த காதலன்; வைரல் மோகத்தால் நேர்ந்த கதி!

தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய காருக்கு விதவிதமாக அலங்காரம் செய்வார்கள். புத்தம்புதிய பெயிண்ட், கண்கவர் டிசைன்களை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் காதலியின் முத்தத்தால் காரை அலங்கரித்த இளைஞரின் கதையை கேட்டுள்ளீர்களா?

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட ஒரு விசித்திரமான முயற்சி, அதிக லைக்குகளையும் ஷேர்களையும் பெறுவதற்குப் பதிலாக காவல் துறையின் நடவடிக்கை, அபராதம் மற்றும் காரை கையாலேயே கழுவுதல் ஆகிய சம்பவங்களில் முடிந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நடந்தது என்ன?

பம்ப்பர் முதல் சக்கரம் வரை லிப்ஸ்டிக் முத்தங்களைப் பதிக்கும் ட்ரெண்ட் ஆன்லைனில் வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து, குவாலியரைச் சேர்ந்த ஆதித்யா சிகர்வார் என்ற இளைஞரின் காதலி, தனது காதலனின் ஸ்விஃப்ட் காருக்கு இந்த புதிய ட்ரெண்டை செய்துகொடுக்க முடிவெடுத்தார்.

ஆதித்யாவின் காதலி சுமார் 4 மணி நேரம் செலவழித்து, காரின் கதவுகள், பானட், பூட் மற்றும் தூண்கள் என காரின் அனைத்து வெளிப்புறப் பேனல்களிலும் லிப்ஸ்டிக் பூசிய உதடுகளால் முத்தமிட்டுள்ளார்.

இதன்மூலம் சுமார் 3,400 முத்தங்கள் வெள்ளை நிற காரில் டிசைனாக பதிவாகின. இதன் விளைவாக, அந்த கார் பார்ப்பதற்கு ஒரு சாதாரண வாகனம் என்பதை விட, ஒரு நகரும் கேன்வாஸ் போலக் காட்சியளித்தது.

இதுகுறித்து இணையத்தில் ஆதித்யா ஜோடி பதிவிட்டது. கார் பதிவு வைரலான நிலையில், உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரிகள், காரின் நம்பர் பிளேட்டை ஜூம் செய்து பார்த்து, அதன் உரிமையாளர் யார் என்பதை மிக எளிதாகக் கண்டுபிடித்தனர்.

அபராதம் விதிப்பு

இதனைத் தொடர்ந்து, காரின் உரிமையாளரான ஆதித்யா சிகர்வாரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தனர். அவரும் காவல்துறையினரிடம் எவ்வித வாக்குவாதமும் செய்யாமல், காரை உருமாற்றம் செய்ததை ஒப்புக்கொண்டார்.

இந்த வைரல் ஆசைக்காக ஆதித்யாவுக்கு 5,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, ’’தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் ஒரு வாகனத்தின் அசல் தோற்றத்தை மாற்றும் வகையில் அதன் மீது எந்தவொரு பொருளையும் அதிக அளவில் பூசுவது 'மோட்டார் வாகனச் சட்டம்' மற்றும் நிலையான சாலைப் பாதுகாப்பு விதிகளுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

लगावेलू जब लिपस्टिक..तो हिलेला नहीं, सीज भइला कार! ग्वालियर में 3400 Kiss Marks वाली गाड़ी जब्त, 5500 का चालान।

ग्वालियर का लिपस्टिक किस स्टंट मामला।

सोशल मीडिया पर फॉलोअर्स बढ़ाने और वीडियो वायरल करने की सनक में ग्वालियर के एक युवक को भारी जुर्माना भुगतना पड़ा।

घटना: युवक... pic.twitter.com/Wj7hei1kOh
— Arun (आज़ाद) Chahal 🇮🇳 (@ArunAzadchahal) August 24, 2026

போக்குவரத்து விதிமுறைகளின்படி, ஒரு கார் என்பது கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தும் அமைப்பு அல்ல’’ என்று தெரிவித்தனர். இந்த நிகழ்வும் வீடியோவாக எடுக்கப்பட்டு, விழிப்புணர்வு நோக்கில் பகிரப்பட்டதாக குவாலியர் காவல்துறை தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது காதலியை வைத்து காரின் வெளிப்பகுதியை 3400 லிப்ஸ்டிக் முத்தங்களால் அலங்கரித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்க முயன்றார். இந்த விசித்திரமான செயல் அதிக வரவேற்பைப் பெறுவதற்குப் பதிலாக, காவல் துறையின் நடவடிக்கைக்கு வழிவகுத்தது.
இதன் விளைவாக, அந்த இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், காரில் இருந்த லிப்ஸ்டிக் தழும்புகளை அவர் தனது கைகளாலேயே கழுவி சுத்தம் செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. இணையத்தில் பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்ட இந்த முயற்சி அவருக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி முடிந்தது.