3400 ‘முத்தக் குறி’... ரூ. 5500 ‘ஃபைன்’ போட்டு காதல் டிரெண்டுக்கு போலீஸ் முற்றுப்புள்ளி
காதலியின் வித்தியாசமான அன்பை வெளிப்படுத்தும் முயற்சி, இளைஞருக்கு ரூ.5,500 அபராதத்தை வாங்கிக் கொடுத்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த இளைஞர் ஆதித்யா சிகர்வார் தனது காரில் காதலியின் அன்பை வித்தியாசமாகப் பதிவு செய்ய நினைத்துள்ளார். இதற்காக அவரது காதலி, காரின் முன்பக்கம் முதல் பின்பக்கம் வரை லிப்ஸ்டிக் மூலம் சுமார் 3,400 முத்தக் குறிகளை பதித்துள்ளார். காதல் கார் ரெடியானதும், அதை நகரின் சாலைகளில் இரண்டு நாட்களாக ஆதித்யா ஓட்டிச் சென்றுள்ளார். காரைப் பார்த்த பலரும் [...]

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த ஆதித்யா சிகர்வார் என்ற இளைஞர், தனது காதலியின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக காரின் முன்பகுதி முதல் பின்பகுதி வரை சுமார் 3,400 முத்தக் குறிகளை லிப்ஸ்டிக் மூலம் வரையச் செய்துள்ளார். இந்த அலங்கரிக்கப்பட்ட காரை அவர் கடந்த இரண்டு நாட்களாக நகர சாலைகளில் ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்த வித்தியாசமான கார் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி காவல்துறை அந்த இளைஞருக்கு 5,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதன் மூலம் காதல் வெளிப்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட அந்த கார் சர்ச்சையில் சிக்கி அபராதத்திற்குள்ளாகியுள்ளது.