PulseNews
லைஃப் ஸ்டைல்

அத்தப்பூ கோலம் முதல் செண்டை மேளம் வரை: கோவையில் கலை அறிவியல் கல்லூரியில் கோலாகல ஓணம் விழா

மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கோவையிலும் பல்வேறு கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இன்று கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் கேரள பாரம்பரிய உடை அணிந்து வந்து, ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுத் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கல்லூரி வளாகத்தில் வண்ணமயமான அத்தப்பூ கோலமிட்டு, மகாபலி மன்னனை வரவேற்ற மாணவ மாணவிகள், கேரளாவின் பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செண்டை மேள நிகழ்வில், மகாபலி மன்னனுடன் இணைந்து மாணவ மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடினர். அத்தப்பூ கோலம் முதல் செண்டை மேளம் வரை: கோவையில் கலை அறிவியல் கல்லூரியில் கோலாகல ஓணம் விழா pic.twitter.com/07o0gN5X1x — Indian Express Tamil (@IeTamil) August 25, 2026 மேலும் கல்லூரி வளாகத்தில் பல்வேறு நடன நிகழ்ச்சிகளும், டிஜே இசை நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்றன. அதில் அனைத்து மாணவ மாணவிகளும் உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி வளாகமே முழுமையாக விழாக்கோலம் பூண்டிருந்தது. செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அத்தப்பூ கோலம் முதல் செண்டை மேளம் வரை: கோவையில் கலை அறிவியல் கல்லூரியில் கோலாகல ஓணம் விழா
PulseNews சுருக்கம்

மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையின் பல்வேறு கல்லூரிகளில் இதற்கான கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நவஇந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் இன்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் கேரள பாரம்பரிய உடைகளை அணிந்து வந்தனர். அத்தப்பூ கோலங்கள் இட்டும், செண்டை மேளம் முழங்கவும் மாணவ, மாணவிகள் ஓணம் பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle