PulseNews
லைஃப் ஸ்டைல்

சக்தி மசாலா சார்பில் ‘சுயசக்தி’ விருது!

சக்தி மசாலா மற்றும் பிராண்ட் அவதார் சார்பில் 9வது ஆண்டாக இல்லத்தரசிகளின் தொழில்முனைவு சாதனைகளை அங்கீகரித்தும், அவர்களை ஊக்குவித்தும் ‘சுய சக்தி’ விருதுகள் மற்றும் ‘ஹோம்பிரெனர்’ விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு பிராண்ட் அவதார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹேமச்சந்திரன் தலைமை தாங்கினார். சக்தி மசாலா நிறுவனர் பி.சி.துரைசாமி, இயக்குநர் சாந்தி துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராகத் தமிழ்நாடு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஏ.ராஜ்மோகன், நிதி அமைச்சர் என். மரியவில்சன் ஆகியோர் பங்கேற்று, வாழ்த்தி பேசினர். இதில், ‘சுய சக்தி’ விருதுகளானது ஜிஆர்ஜி கல்வி நிறுவன நிர்வாகி நந்தினி ரங்கசாமி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் செளமியா அன்புமணி, ஐஏஎஸ் கவிதா ராமு ஆகியோருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதேபோல், ‘ஹோம் பிரெனர்’ விருதானது சென்னையைச் சேர்ந்த சுவேதா ஜெஸி, உமாமகேஸ்வரி, சயாதேவி, ஹிலர் சங்கரி, சித்ரா லிங்கேஸ்வரன், திண்டுக்கல்லைச் சேர்ந்த கவிமகிழினி தங்கராஜ், மதுரையைச் சேர்ந்த காயத்ரி சிவகுமார், ஈரோட்டைச் சேர்ந்த செளந்தர்யா லட்சுமி ஆகிய 9 பேருக்கும் மற்றும் சுயச் சார்பு மகளிர்களுக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் விருதுகள் வழங்கி பாராட்டப் பெற்றனர். இந்நிகழ்ச்சியில், ராஜ்யசபா எம்பி பிரவீன் சக்ரவர்த்தி, சென்னை அண்ணா நகர் தொகுதி எம்எல்ஏ வி.கே.ராம்குமார், திரைப்பட நடிகர் சூரி, திரைப்படத்துறையினர், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், திரைப்படத்துறையினர், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சக்தி மசாலா சார்பில் ‘சுயசக்தி’ விருது!
PulseNews சுருக்கம்

சென்னையில் சக்தி மசாலா மற்றும் பிராண்ட் அவதார் சார்பில் ஒன்பதாவது ஆண்டாக ‘சுயசக்தி’ மற்றும் ‘ஹோம்ப்ரெனர்’ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இல்லத்தரசிகளின் தொழில்முனைவு சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு பிராண்ட் அவதார் சிஇஓ ஹேமச்சந்திரன் தலைமை தாங்கினார். சக்தி மசாலாவின் நிறுவனர் பி.சி.துரைசாமி மற்றும் இயக்குநர் சாந்தி துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle