காற்றில் கலந்த கீதம்!
நா ம் வாழும் உலகம் பாடல்களால் நிறைந்தது... இயங்கக்கூடியது. நம் மனதை அமைதிப்படுத்தவும், சோகமான நேரங்களில் சுமையிறக்கி இனிதாக்கவும், நம் மகிழ்ச்சியை உற்சாகமாக வெளிப்படுத்தவும் பாடல்களே பிரதானம்! நம் வாழ்வின் பிறப்பு முதல் இறப்பு வரை பாடல்களே நம்மை கரம்பிடித்து அழைத்துச்செல்கின்றன... தாலாட்டுக் கேட்டு உறங் குவதும்... வயலில் நாற்று நடும்போதும், களை பறிக்கும்போதும், கதிரறுக்கும்போதும், தோட்டத்தில் தேயிலை பறிக்கும்போதும் உழைக்கும் பெண்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல்களில் வேலைப்பளுவின் வலி மறக்கும்... சடங்கு வீடுகளிலும், திருவிழா கூடுகையிலும், திருமண வீடுகளிலும்கூட பாடல்களே நம்மை ஒருங்கிணைக்கும். இறப்பின் வலியை போக்குவதற்கும் ஒப்பாரிப் பாடலே நமக்கு ஆறுதலாயிருக்கிறது. ஜானகி என்னும் இசைக்குயில், வயது மூப்பின் காரணமாக, தனது 88-ஆவது வயதில் தன் குரலை நிறுத்திக்கொண்டது! எஸ். ஜானகியின் குரலுக்கென்றே தனி வசீகரம் வாய்த்திருக் கிறது. செல்லப்பிராணியை மென்மையாக வருடிக் கொடுப்பதுபோல சொற் களை மென்மையாக உச்சரிப்பது இவரின் தனிச்சிறப்பு! குழந்தைபோல கொஞ்சுவதும், கிளிபோல குரலெழுப்புவதும், குமரிபோல சிணுங்குவதுமாக இவரின் பாடல்களின் இடையே பலவித உணர்வுகளை வெளிப்படுத்துவதும் எத்தனை ஈர்ப்பு! தெம்மாங்குப் பாடல்களில் அதற்கேற்ப இழுத்து வளைத்துப் பாடுவதிலும் வல்லவர்! ஊர்த் திருவிழாக்களில் இசைத்தட்டுக்களில் பாடல்களைக் கேட்டு ரசித்த காலகட்டங்களில் மிகவும் பிரபலமான வசனம்... "சாந்தா! உட்கார்... ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்? உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா... பாடு சாந்தா, பாடு!'' என்று சாவித்திரியிடம் ஜெமினிகணேசன் கேட்க, சாவித்திரி "சிங்கார வேலனே தேவா! அருள் சீராடும் மார்போடு வா வா!' என்று பாடுவார். "கொஞ்சும் சலங்கை' என்ற படத்தில் இடம்பெற்ற அந்த பாடலில் நாதஸ்வர வித்வானான ஜெமினி கணேசனுக்கும், நல்ல குரல் வளமிக்க பாடகியான சாவித்திரிக்குமான போட்டியாக ஒலிக்கும் அந்த பாடலில் இருவருக்கும் போட்டி நடக்கும். உண்மையில் அந்த போட்டி, நாதஸ்வர சக்கரவர்த்தி காருகுறிச்சி அருணாச்சலத்துக்கும், பாடகி எஸ்.ஜானகியின் குரல் வளத்துக்குமான போட்டியே. காருகுறிச்சியாரின் நாதஸ்வரத்தின் நுட்பமான சங்கதிகளையும், அதிர்வையும் உள்வாங்கி, அதற்கேற்ப ராகம் பிசகாமல், இனிமையான குரல் வளத்தோடு சுவாசத்தையே அடக்கி பாடி அசத்தியிருப்பார். இப்படியான பாடல்தான் எஸ். ஜானகிக்கென தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது, இந்தியாவில் பல மொழிகளிலும் அவருக்கான தனித்த இடத்தை பெற்றுத்தந்தது. இசையரசி, தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், கான கோகிலா, குயின் ஆஃப் எக்ஸ்ப்ரஷன் என்றெல்லாம் பல்வேறு பட்டங்களில் அழைக்கப்படும் எஸ்.ஜானகி, 1938ஆம் ஆண்டு, ஏப்ரல் 23-ஆம் தேதி ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்திலுள்ள பள்ளபட்லா கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சிஸ்ட்லா ஸ்ரீராமமூர்த்தி, ஆயுர்வேத மருத்துவராகவும், ஆசிரியராகவும் இருந்தவர். ஜானகி தனது சிறுவயதிலேயே நாதஸ்வர வித்வான் பைடிசாமி என்பவரிடம் இசையை கற்றுக்கொண்டு, மேடைக்கச்சேரிகளில் பாடத் தொடங்கினார். 1957-வது ஆண்டில் சென்னைக்கு வந்து குடியேறியது அவரது குடும்பம். முதன்முதலாக, "விதியின் விளையாட்டு' என்ற படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். அந்த விதியின் விளையாட்டு, இந்தியத் திரையுலகின் விதியையே அடுத்த பல பத்தாண்டுகளுக்கு இனிமையாக்கியது! பின்னணிப் பாடகியாகத் தனது இசையுலகில் எண்ணற்ற இசையமைப்பாளர் களோடு பணியாற்றியுள்ள எஸ். ஜானகியின் திறமைக்கேற்ற பாடல்களை வழங்கி, அவரது குரலின் இனிமையை வெளிப்படுத்திய இசையமைப்பாளர் களில் இசைஞானி இளையராஜா முதன்மையானவர். அதனால்தானோ, இளையராஜாவின் இசையில்தான் எஸ். ஜானகி எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார். இளையராஜாவின் அறிமுகப் படமான "அன்னக்கிளி'யிலேயே தனது குரல் வளத்தால் காலத்தால் அழியாத, "ஏ, மச்சானைப் பார்த்தீங்களா?', "அன்னக்கிளி உன்னத் தேடுதே!' ஆகிய இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார் எஸ்.ஜானகி. அன்னக்கிளி திரைப்படத்தைவிட, அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை. அதில் இளையராஜாவின் இசையைப்போலவே எஸ்.ஜானகியின் குரல் வளத்துக்கும் ஒரு பங்குண்டு! இதே இளையராஜாவின் இசையில், "அச்சாணி' திரைப்படத்துக்காக "மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்' என்ற பாடல் அத்தனை உருக்கம்... கலையென்பது மதங்களைக் கடந்தது என்பதைப்போல் இசையின் ரசனையும் மதங்களைக் கடந்தது! அதனால் தான் இப்பாடலை ரசிக்கும் அனைவருக்கும், இப்பாடல் வரிகள் மனதை உருக்கும்! படத்தில் இடம்பெற்ற பாடல் என்றில்லாமல், சந்தர்ப்ப சூழலால் படத்தில் இடம்பெறாமல்போன பாடலும்கூட இளையராஜா - எஸ். ஜானகி கூட்டணியில் பெரிதும் ரசிக்கப்பட்டுள்ளது. "நிழல்கள்' திரைப் படத்துக்காக எஸ்.ஜானகி பாடியுள்ள "தூரத்தில் நான் கண்ட உன் முகம்' என்ற அந்த மென்மையான பாடலில் சிறு அதிர்வோடு சொற்களை உச்சரித்து அழகாகப் பாடியிருப்பார். இப்பாடல் பதிவு குறித்து இசைஞானி இளையராஜா கூறும்போது, இப்பாடலை நேர்த்தியாகப் பாடுவதற்காக 14 டேக் வரை திரும்பத்திரும்ப எஸ். ஜானகி பாட, 14-ஆவது டேக்கை இளையராஜா ஏற்றுக்கொள்ளவும், எஸ்.ஜானகிக்கோ ஏற்பில்லை. இதைவிட இன்னும் அருமையாகப் பாட விரும்பினார். எனவே இளையராஜாவிடம் சொல்லி அடுத்தொரு முறை பாடி, அதன்பின்னரே திருப்தியடைந்தார். இத்த சம்பவத்தை சொன்ன இளையராஜா, எஸ்.ஜானகியின் தொழில் சிரத்தையையும், உறுதியையும் வியந்து பாராட்டினார். அதேபோல் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மூச்சுவிடாமல் அசராமல் பாடக்கூடிய எஸ். ஜானகியின் திறமையை சுட்டிக்காட்டிப் பாராட்டியிருக்கிறார். அந்தளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு இத்துறையில் இயங்கியதால்தான் தொடர்ச்சியாக நான்கு தலைமுறை பாடகர்களோடும் இணைந்து பாடி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, இந்தி, கொங்கனி, ஜெர்மன், பஞ்சாபி, உருது, துளு, சௌராஷ்டிரா, சிங்கள மொழிகள் உட்பட சுமார் 20 மொழிகளில் 48,000 பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார் எஸ். ஜானகி! எஸ்.எம். சுப்பையா நாயுடு, கே.வி. மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ். ராஜேஸ்வர ராவ், வி. தட்சிணாமூர்த்தி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் வரை பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் இணைந்து பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார்! "ஓப்போல்' என்ற மலையாளத் திரைப்படத்தில் இடம்பெற்ற "ஏட்டுமானூர் அம்பலத்திலே' என்ற பாடலுக்காகவும், "16 வயதினிலே' படத்தில் இடம்பெற்ற செந்தூரப்பூவே பாடலுக்காகவும், "சித்தாரா' என்ற தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற 'வென்னெல்லோ கோடாரி அந்தம்' என்ற பாடலுக்காகவும் மற்றும் 'தேவர் மகன்' படத்தில் இடம்பெற்ற "இஞ்சி இடுப்பழகா' பாடலுக்காகவுமாக நான்கு முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார். அதுபோக, தமிழ்நாடு அரசின் விருதுகளை 6 முறையும், கேரள அரசின் விருதுகளை 11 முறையும், ஆந்திர அரசின் விருதுகளை 10 முறையும், கர்நாடக அரசின் விருதினை ஒரு முறையும், ஒடிசா அரசின் விருதை ஒருமுறையும் பெற்றுள்ளார். ஒரு பாடகர், பல கலைஞர்களுக்காகப் பாடலாம்... பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் இனிமையான ராகத்தோடு, சொற்களில் பிழையில்லாமல் பாடுவதென்றால் அவ்வளவு எளிதா என்ன? பெருஞ்சாதனையல்லவா! இசையரசி எஸ்.ஜானகியின் குரல் வளத்தின் இனிமை, இசை ரசிகர்களை பல்லாண்டுகளாக வசியப்படுத்திய போதிலும், ஒன்றிய அரசுக்கு தாமத மாகத்தான் தெரியவந்ததுபோல! கடந்த 2013-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு எஸ்.ஜானகிக்கு பத்மபூஷண் விருதை அறிவித்தது. மிகமிக காலம்தாழ்த்தி தன்னை இவ்விருதுக்கு தேர்வுசெய்ததை ஒரு படைப்பாளிக்கே உரிய சுய மரியாதையோடு வாங்கமறுத்தார் எஸ்.ஜானகி! இவ்விருது தனக்கு தாமதமாகக் கொடுக்கப்படுவதாகவும், தென்னிந்தியாவைச் சேர்ந்த கலைஞர்களை இரண்டாம்பட்சமாகப் பார்ப்பதாகவும் வெளிப்படையா கக் கூறி, விருதை வாங்கமறுத்தார்! அதற்கான விளக்கமாக, "இந்தியத் திரைத்துறையில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக பல மொழிகளில் எண்ணற்ற பாடல்களை பாடியிருக்கிறேன். இவ்வளவு அற்புதமாகப் பாடியிருக்கும்போது என்ன மாதிரியான விருதினை வழங்கி கவுரவித்திருக்க வேண்டும்? பாரத ரத்னா போன்ற மிக உயர்ந்த விருதை வழங்கியிருந்தால்கூட நான் ஏற்றுக்கொண்டிருப்பேன். அதைத்தவிர எனக்கு வேறெந்த விருதும் வேண்டாம். விருதுக்காக நான் பாட வரவில்லை. நான் பாடியதெல்லாம் என்னுடைய அன்பான ரசிகர்களுக்காக மட்டுமே!'' எனக்கூறி பிரமிக்க வைத்தார். விருதுக்காக எத்தனையோ பரிந்துரைகளைத் தேடித்திரியும் உலகில், தனது சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத அவரது தைரியம் அனைவராலும் வியந்து பாராட்டப்பட்டது! காலத்தால் அழியாமல் இன்றும் அனைவராலும் ரசிக்கப்படும் அவரது பாடல்களை எப்படி பட்டியலிடுவது? கல்லுக்குள் ஈரம் திரைப்படத்துக்காக "சிறு பொன்மணி அசையும்', "கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்துக்காக "பூவரசம் பூ பூத்தாச்சு', கவியரசு கண்ணதாசன் எழுதிய இறுதித் திரைப்பாடலான மூன்றாம் பிறை திரைப்படத்துக்காக "கண்ணே கலைமானே', "ஊரு சனம் தூங்கிடுச்சு..', "ஜானி' திரைப்படத்தில் இடம்பெற்ற "காற்றில் எந்தன் கீதம்', தளபதி படத்தில் இடம்பெற்ற "சின்னத்தாயவள் தந்த ராசாவே', "காதல் ஓவியம்' படத்தில் இடம்பெற்ற "நாதம் என் ஜீவனே!', அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக பாடப்பட்டு, ஆனால் படத்தில் இடம்பெறாத போதும் இப்போதுவரை ரசிக்கப்படும் பாடலான "புத்தம் புது காலை', "ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், உயிரே படத்துக்காக பாடிய "நெஞ்சினிலே நெஞ்சினிலே' பாடல், சங்கமம் படத்துக்காக பாடிய "மார்கழி திங்களல்லவா?' பாடலில் வெளிப்படுத்திய காதலின் ஏக்கம், இளம் இசையமைப்பாளரான அனிருத் இசையில் நெகிழவைக்கும் உணர்வை வெளிப்படுத்திய "அம்மா அம்மா அம்மா' பாடல் என அவரது சூப்பர்ஹிட் பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்! பெண்ணின் விரக தாபத்தை வெளிப்படுத்தக்கூடிய வகையிலான "பொன்மேனி உருகுதே' பாடலின் தொடக்கத்திலும், இடையிலும் அவர் வெளிப்படுத்தும் சிணுங்கல் ஒலி ஈர்ப்பானது. அதேபோல், "நிலா காயுது... நேரம் நல்ல நேரம்' என்ற பாடலில், கிராமத்து கணவன்- மனைவி இடையே காதலை... காமத்தை வெளிப்படுத்துவது போன்ற உணர்வோடான பாடலில், மலேசியா வாசுதேவனோடு இணைந்து பாடி அசத்தியிருப்பார். முதல் மரியாதை படத்தில் இடம்பெற்ற "அந்த நிலாவத்தான் நா கையில புடிச்சேன்' பாடலில் வெளியாகும் காதலின் குதூகலமும், "பூங்காற்று திரும்புமா?' என்ற பாடலில், தன் திருமண வாழ்வில் விரக்தியான ஒருவரின் ஏக்கத்துக்கு மருந்திடுவது போல், "ராசாவே வருத்தமா?' எனக் கேட்பதாகப் பாடும் அந்த குரலின் ஈர்ப்பில் மயங்காத மனமும் உண்டோ! இசையரசி எஸ்.ஜானகிக்கு குழந்தைகளின் குரலில் பாடுவதும் மிகவும் பிடித்த ஒன்று. மௌன கீதங்கள் படத்தில் இடம்பெற்ற "டாடி டாடி... ஓ மை டாடி!, ரங்கா படத்தில் இடம்பெற்ற "டூத் பேஸ்ட் இருக்கு பிரஷ் இருக்கு' என்ற பாடல், ருசி கண்ட பூனை படத்தில் இடம்பெற்ற "கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே? நீ இருக்கும் இடம் எனக்கு தெரியாதே!' என்ற பாடல் எனப் பல பாடல்களில் சிறுவனாக.... சிறுமியாகப் பாடி, குழந்தைகளுக்கும் பிடித்தமான பாடகராக விளங்கியவர் எஸ்.ஜானகி. அவர் இவ்வுலகிலிருந்து மறைந்தாலும் அவரது குரல் இதே உலகில்... காற்றில் உலாவிக்கொண்டே தான் இருக்கும்!

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →