Gokulashtami: புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர்.. கனவில் வந்தால் அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?

கிருஷ்ண பகவானின் பெயரைக் கேட்டாலே நம் அனைவருக்கும் அவரது வசீகரமான முகம் தான் நினைவுக்கு வரும். முகத்தில் புன்னகை, தலையில் சூடிய மயில் இறகு, கைகளில் புல்லாங்குழல் ஆகியவை இல்லாமல் கிருஷ்ணரை நாம் நினைத்துப் பார்க்கவே முடியாது. பகவான் கிருஷ்ணர் அனைவராலும் விரும்பப்படும், வழிபடப்படும் ஒரு கடவுளாவார்.இப்படியான பகவானுக்கு ஆண்டுக்கு ஒருமுறை அவர் பிறந்த தினம் கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படும்.

அந்த வகையில் 2026ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை செப்டம்பர் 4ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ண பகவான் மதுரா நகரில் பிறந்தார். கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ணர் சுட்டிக்குழந்தையாக திகழ்ந்தார். அவர் செய்த சேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவை யாவும் கிருஷ்ணர் பிறந்த நாளில் நினைவுக்கூரப்படும்.

இந்த நிலையில்கனவில் கிருஷ்ண பகவான் புல்லாங்குழல் வாசிப்பது போல் தோன்றினால் என்ன நடக்கும் என்பது பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

பகவான் கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிப்பது போல் கனவு காண்பது ஒரு மங்களகரமான நிகழ்வாக சாஸ்திரங்களின்படி சொல்லப்படுகிறது. அப்படி நிகழ்ந்தால் மன அமைதி, நிம்மதியான தூக்கம், வாழ்க்கையில் நேர்மறையான மாற்றம் போன்றவை கொண்டு வரும் என நம்பப்படுகிறது. கிருஷ்ணரின் புல்லாங்குழல் நாதம் அன்பு மற்றும் மகிழ்ச்சியுடன் தொடர்புடையதாக உள்ளது. புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணரின் தோற்றம் குடும்ப உறவுகளில் மாற்றத்தை உண்டாக்குகிறது. ஒரு உறவில் இருந்து நீங்கி நீண்டகாலமாக நிலவி வரும் சண்டை, கருத்து வேறுபாடு, பதற்றம் போன்றவை நீங்கி உறவுகளின் இனிமையான அன்பு நிகழும் என்பதற்கான அறிகுறியாக பார்க்கலாம்.

கிருஷ்ண பகவானின் புல்லாங்குழல் இசை மயக்கமூட்டுவதாகவும் அமைதியளிப்பதாகவும் பார்க்கப்படுகிறது. அப்படி காண்பது மன அமைதியை மேலோங்கி மன அழுத்தம், பதற்றத்தை குறைக்கும் என சொல்லப்படுகிறது. கிருஷ்ணருக்கும் ராதைக்கும் இடையிலான காதல் அன்பு மற்றும் பக்தியின் சின்னமாக பார்க்கப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு, இந்தக் கனவு விரைவில் மணமுடிக்கக்கூடிய பெண்ணின் வருகையை காட்டுவதாக இருக்கும். திருமாணமானவர்களுக்கு வாழ்வின் அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.

கிருஷ்ண பகவான் விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார். கனவில் கிருஷ்ணரை காண்பது வாழ்க்கையில் நேர்மறையான வாய்ப்பை உண்டாக்கும் என சொல்லப்படுகிறது. கிருஷ்ணர் மகிழ்ச்சியான மனநிலையில் சிரித்துக்கொண்டு புல்லாங்குழல் வாசிப்பதாகக் கண்டால் அது விரைவில் நல்ல செய்தி உங்களைத் தேடு வரும் என நம்பப்படுகிறது. மேலும் உங்களைச் சுற்றியுள்ள எதிரிகள் அல்லது தீய எண்ணம் கொண்டவர்கள் விலகுவார்கள் என்பதும் சொல்லப்படுகிறது.

கிருஷ்ணரின் வசீகரமான முகமும், புன்னகையும், மயில் இறகும், கைகளில் புல்லாங்குழலும் அவரது அடையாளமாகத் திகழ்கின்றன. அனைவராலும் பெரிதும் போற்றப்படும் பகவான் கிருஷ்ணரின் பிறந்தநாள் ஆண்டுதோறும் கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை 2026-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.