PulseNews
லைஃப் ஸ்டைல்

'உயர் நீதிமன்றத்தின் உயர் கோபுரத்தில் ஒரு கலைக் குயில் கூடு கட்டி இருக்கிறது': நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் பாடலை ரசித்து வியந்த வைரமுத்து

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் பல நிகழ்ச்சிகளுக்கு சென்று மாணவர்கள் மற்றும் மக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல அறிவுரைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில், இவர் நிகழ்ச்சி ஒன்றில் ‘பூவே இளைய பூவே’ பாடலை பாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை பாராட்டி கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றி பகிர்ந்துள்ளார். மரங்கள் மிதக்குது; ஆனா வேர் பூமியில இல்லை: மர்ம தீவால் அதிகாரிகளுக்கு தூக்கம் போச்சு அதில், “உயர்நீதிமன்றத்தின் மாண்பமை நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்களின் ஒப்புதலோடு இந்தப் பதிவை வெளியிடுகிறேன். கண்ணால் கண்ட காட்சியை நம்ப முடியவில்லை என்னால். ஓர் இசை மேடையில் நீதியரசர் என் பாடலைப் பாடுகிற காட்சி அது. 'பூவே இளைய பூவே' என்ற என் புகழ்பெற்ற பாடலைப் பெரும்பாலும் சுதி விலகாமலும் முற்றிலும் தமிழ் பிறழாமலும் என்பாட்டோடு கரைந்து ஈடுபாட்டோடு அவர் பாடிய காணொலி வியப்பில் ஆழ்த்தியது. "இரு புருவம் இரவானது இருந்தும் என்ன வெயில் காயுது" என்ற வரியில் வெயில் காயுது என்ற சாகித்தியத்தின் மீது முழுச் சங்கதிபோட முயன்றிருப்பது நீதிபதியின் சங்கீதக் காதலுக்குச் சாட்சியாகிறது. உயர்நீதிமன்றத்தின் மாண்பமை நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்களின் ஒப்புதலோடு இந்தப் பதிவை வெளியிடுகிறேன் கண்ணால் கண்ட காட்சியை நம்ப முடியவில்லை என்னால் ஓர் இசை மேடையில் நீதியரசர் என் பாடலைப் பாடுகிற காட்சி அது 'பூவே இளைய பூவே' என்ற என் புகழ்பெற்ற பாடலைப் பெரும்பாலும் சுதி... pic.twitter.com/CCinbU0DSY — வைரமுத்து (@Vairamuthu) September 1, 2026 சட்டத்துறை நீதித்துறை வித்தகர்கள் பலரும் தமிழ்க் காதலும் கலைக் காதலும் கொண்டிருந்ததை வழிவழியாக வரலாறு காட்டி வருகிறது. இதோ இந்தத் தலைமுறைக்கு நீதித்துறையின் கலை அடையாளங்களுள் நீதிபதியும் ஒருவர். காணொலி கண்டு அவரை அழைத்துப் பேசினேன். "சின்ன வயதிலிருந்து தமிழும் இசையும் கேட்டு வளர்ந்தவன் நான்" என்றார். எனக்கு மகிழ்ச்சி உயர்நீதிமன்றத்தின் உயர் கோபுரத்தில் ஒரு கலைக்குயில் கூடுகட்டியிருப்பது. நீங்களும் கேளுங்கள் நீதிக்குயில் பாடுவதை” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'உயர் நீதிமன்றத்தின் உயர் கோபுரத்தில் ஒரு கலைக் குயில் கூடு கட்டி இருக்கிறது': நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் பாடலை ரசித்து வியந்த வைரமுத்து
PulseNews சுருக்கம்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் 'பூவே இளைய பூவே' பாடலைப் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கவனம் ஈர்த்தது.

நீதிபதியின் இந்தப் பாடலைப் பாராட்டி கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், உயர் நீதிமன்றத்தின் உயர் கோபுரத்தில் ஒரு கலைக் குயில் கூடு கட்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டு வியந்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle