தமிழக பெண் பக்தர் கொடுத்த செக்; அதிர்ச்சியடைந்த ராமர் கோயில் நிர்வாகத்தினர்
அயோத்தி ராமர் கோயிலுக்குத் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் சென்றிருந்தார். அவர் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு ரூ.10 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினார். மேலும், அந்த கோயிலின் ஊழியர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.4 கோடி மதிப்பிலான காசோலையையும் வழங்கியுள்ளார். இந்த காசோலையை, அவர் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்ர அறக்கட்டளைக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த காசோலை போதிய பணமில்லாததால் வங்கியிலிருந்து திரும்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த காசோலை வங்கியில் செலுத்தப்பட்டபோது, சம்பந்தப்பட்ட கணக்கில் வெறும் ரூ.3 மட்டுமே இருந்தது தெரியவந்துள்ளது. இது நிர்வாக ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், காசோலை திரும்பியது குறித்து சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்ப வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மிகவும் பெரிய மதிப்பிடலானவை என்பதால் வன்ஹ்கி நிர்வாகம், இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே, அந்த நபரின் தொலைப்பேசி எண் இருப்பதால், பேச்சு வார்த்தை மூலமாகவும் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், நன்கொடையாகப் பெறப்படும் இந்த ரூ.4 கோடியை ஊழியர்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்துவோம் என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் தருமாறு, அந்த பெண் பக்தர் அறக்கட்டளை நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அந்த நிர்வாகம் அவ்வாறான உத்தரவாதத்தைத் தர மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கோயில் நிர்வாகத்தைப் பொறுத்தவரைக் காசோலை திரும்புவது என்பது புதிதல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டு கோயில் கட்டுவதற்கான கட்டுமானத்துக்காக நடத்தப்பட்ட நிதி சேகரிப்பு இயக்கத்தில் சுமார் ரூ.3500 கோடி வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, ரூ.100 கோடி மதிப்புள்ள பல காசோலைகள் வங்கிக்குத் திரும்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவற்றில் பல காசோலைகள் மீட்கப்பட்டன. அதன்படி, கிட்டவிட்ட ரூ.22 கோடி வரையிலான ரூபாய்கள் திரும்பப் பெறப்பட்டன. தற்போது கோயிலுக்கு மாதந்தோறும் ரூ.3 முதல் ரூ.4 கோடி வரையிலான நன்கொடைகள் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இது சம்பந்தமாக அறக்கட்டளை இதுவரை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர், தரிசனத்திற்குப் பிறகு 10 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார். மேலும், கோயில் ஊழியர்களின் வசதிக்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்ர அறக்கட்டளைக்கு 4 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலையை அவர் அளித்துள்ளார்.
இந்தக் காசோலையை வங்கிக்கு அனுப்பியபோது, அதில் போதிய பணம் இல்லாத காரணத்தால் அது திரும்பி வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் கோயில் நிர்வாகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.